/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தி சிறப்பு வழிபாடுமாவட்டத்தில் அனுமன் ஜெயந்தி சிறப்பு வழிபாடு
மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தி சிறப்பு வழிபாடு
மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தி சிறப்பு வழிபாடு
மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தி சிறப்பு வழிபாடு
ADDED : ஜன 12, 2024 12:37 AM
விருதுநகர், : விருதுநகர் மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தியை ஒட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
விருதுநகர் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள ராமர் கோயில் சாந்த சொரூப ஆஞ்சநேயர் தங்க, வெள்ளி கவசங்களில், வெற்றிலை மாலையால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து சிறப்பு வழிபாடு, லட்சார்ச்சனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமைந்துள்ள ஆஞ்சநேயர், அல்லம்பட்டி காமராஜர் பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள அனுமன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாட்டில் ஈடுபட்டனர்.
* சிவகாசி சிவன் கோயில் முன்பு விசுவ ஹிந்து பரிஷத் பஜ்ரங்தள் சிவகாசி கிளை சார்பில் 14 வது ஆண்டு அனுமன் ஜெயந்தி உற்சவ விழா, பஜனை மேளா நிகழ்ச்சி நடந்தது. சுவாமிகள் ராமர், சீதா, அனுமனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து ராம ஆஞ்சநேயர், ராமர், சீதா ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
*திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோயிலில் அலங்கார திருமஞ்ஜனம் அகண்ட நாம பஜனை நடந்தது. பால்குடம் எடுக்கப்பட்டது.
* சிவகாசி ஈஞ்சார் விலக்கில் அனுமன் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. நாரணாபுரம் சக்கரத்தாழ்வார் கோயிலில் சுவாமிக்கு காய்கறி, பழங்கள் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.
சிவகாசி பஸ்டாண்ட் துர்க்கை பரமேஸ்வரி அம்மன் கோயிலில் சீனிவாச பெருமாள் அலங்காரம் பூஜைகள் நடந்தது. பேச்சியம்மன் கோயிலில் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
* ராஜபாளையம்ஆதி வழிவிடும் விநாயகர் கோயிலில் உள்ள அஷ்ட வரத ஆஞ்சநேயர் கோயிலில் அதிகாலை 4:30 மணிக்கு கும்ப ஜெபம், கணபதி ஹோமத்துடன் 5:30 மணிக்கு அபிஷேகம் அதனை தொடர்ந்து வெள்ளி கவச அலங்காரம் தீபாராதனைநடந்தது.
மதியம் 3:00 மணிக்கு திரவிய ஹோமம் 32 வகையான அபிஷேகம் அதனை தொடர்ந்து அனுமன் சாலிசா பாராயணம் சிறப்பு அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை மாப்பிள்ளை விநாயகர் கோயில் நற்பணி மன்ற விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
* சர்வ சமுத்திர அக்ரஹாரம் சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் அதிகாலை கோபூஜை சிறப்பு அபிஷேகம், ஆஞ்சநேயருக்கு சுந்தரகாண்டம் பாராயணம் , சிறப்பு அலங்காரம், அன்னதானம் நடந்தது.
* கோதண்ட ராமசாமி கோயிலில் அதிகாலை முதல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் வெண்ணெய் காப்பு, வடை மாலை சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். அன்னதானம் நடந்தது.
* சீரடி சாய்பாபா கோவிலில் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தது. இது தவிர சுற்றுப்பகுதி ராமர் கோயில்கள், தேவதானம் கல்லணை ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு வழிபாடு அலங்காரம் நடந்தது. திரளான பக்தர்கள் வழிபட்டனர்.