/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ஏரிச்சாலை மேம்பாட்டு பணியில் தாமதம்; குடிநீர் ஆதாரத்தில் செப்டிக்டேங்க் கழிவு கொந்தளிப்பில் 'கொடை' 2 வது வார்டு மக்கள்ஏரிச்சாலை மேம்பாட்டு பணியில் தாமதம்; குடிநீர் ஆதாரத்தில் செப்டிக்டேங்க் கழிவு கொந்தளிப்பில் 'கொடை' 2 வது வார்டு மக்கள்
ஏரிச்சாலை மேம்பாட்டு பணியில் தாமதம்; குடிநீர் ஆதாரத்தில் செப்டிக்டேங்க் கழிவு கொந்தளிப்பில் 'கொடை' 2 வது வார்டு மக்கள்
ஏரிச்சாலை மேம்பாட்டு பணியில் தாமதம்; குடிநீர் ஆதாரத்தில் செப்டிக்டேங்க் கழிவு கொந்தளிப்பில் 'கொடை' 2 வது வார்டு மக்கள்
ஏரிச்சாலை மேம்பாட்டு பணியில் தாமதம்; குடிநீர் ஆதாரத்தில் செப்டிக்டேங்க் கழிவு கொந்தளிப்பில் 'கொடை' 2 வது வார்டு மக்கள்

குடியிருப்பு வாசிகள் அவதி
ராஜா, இயற்கை ஆர்வலர்: செம்மண் மேடு பகுதியில் சில தினங்களுக்கு முன் மண் சரிவு ஏற்பட்டு குடிநீர் சப்ளை பாதித்துள்ளது. மேல்மலைக்கு செல்லும் இந்த பகுதியில் நெடுஞ்சாலை துறையின் ரோடுகள் குண்டும் ,குழியுமாக பராமரிக்கப்படாததால் குடியிருப்பு வாசிகள் அவதியுறுகின்றனர் .போக்குவரத்து வாகனங்கள் பழுதாகி நிற்கும் அவலமும் உள்ளது. மருத்துவ வசதிக்கு பயன்படும் 108 வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. நகராட்சி படகு குழாமை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
பயணிகளுக்கு இடையூறு
காதர் நவாஸ், வியாபாரி : கீழ்பூமி பகுதியில் வசிப்பவர்களுக்கு பட்டா இல்லாத நிலை உள்ளது. அதற்கு மாற்றாக உள்ள வரி இனங்களை நகராட்சி அமல்படுத்த வேண்டும். ஏரிச்சாலையில் உள்ள கழிப்பறையை மாலை 5 :00மணிக்கு மூடுவதால் சுற்றுலாப் பயணிகள் அவதிப்படுகின்றனர். ஏரிச்சாலையில் கட்டுமான பொருட்கள் குவிப்பதால் பயணிகளுக்கு இடையூறாக உள்ளது. கீழ்பூமியில் தனியார் விடுதிக்கு செல்லும் பகுதியில் கூடுதல் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும்.
சிமென்ட் ரோடு சேதம்
அகஸ்டின், டிரைவர்: கீழ் பூமி பகுதி தனியார் விடுதி செப்டிக் டேங்க் கழிவுநீர் ஜிம்கானா குடிநீர் ஆதாரத்தில் கலக்கிறது. இதிலிருந்து செல்லும் நீர் ஏரியில் கலப்பதால் மாசடையும் அபாயம் உள்ளது. தெருவிளக்குகள் ஒன்றிரண்டு எரியாத நிலையில் அவற்றை சீர் செய்ய கூறினால் மாதக்கணக்கில் சரி செய்யாத நிலை உள்ளது. தற்போது அமைத்த சிமென்ட் ரோடு சேதம் அடைந்துள்ளது. இந்த ரோட்டின் வழியாக தனியார் விடுதிக்கு குடிநீர் எடுப்பதால் ரோடு சகதியாக உள்ளது. ஏரிச்சாலையில் சமூக விரோத செயல்களை கண்காணிக்க சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும்.
குடிநீர் பிரச்னைக்கு தீர்வு
ஜெயசுந்தரம், கவுன்சிலர், (அ.தி.மு.க.,): ரூ. 2 கோடிக்கு வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டுள்ளது. எரிச்சாலையில் ரூ. 24 கோடியில் வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. செம்மண்மேடு பகுதியில் ஏற்பட்ட குடிநீர் பிரச்னை சில தினத்தில் சரி செய்யப்படும். மெயின் ரோடு சரி செய்ய நெடுஞ்சாலைத்துறையிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக தெரு விளக்கு அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காட்டுமாடு, காட்டுப்பன்றி உள்ளிட்டவற்றை தடுக்க வனத்துறையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.