Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ 'பைக் டாக்ஸி'க்கு மாநில அரசே அனுமதி அளிக்கலாம்

'பைக் டாக்ஸி'க்கு மாநில அரசே அனுமதி அளிக்கலாம்

'பைக் டாக்ஸி'க்கு மாநில அரசே அனுமதி அளிக்கலாம்

'பைக் டாக்ஸி'க்கு மாநில அரசே அனுமதி அளிக்கலாம்

ADDED : ஜூலை 03, 2025 12:51 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி: 'பைக் டாக்ஸி' சேவைக்கு தனியார் இருசக்கர வாகனங்களை சட்டப்பூர்வமாக பயன்படுத்த, அந்தந்த மாநில அரசுகளே அனுமதி அளிக்கலாம்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுதும், 'பைக் டாக்ஸி' எனப்படும், இருசக்கர வாகன பொது போக்குவரத்து சேவைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஆட்டோ, டாக்ஸியுடன் ஒப்பிடும் போது கட்டணம் குறைவு என்பதால், நடுத்தர வர்க்கத்தினர் இதை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

எனினும், உரிய சட்டவிதிகளோ, பயணியரின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாததால், 'பைக் டாக்ஸி' சேவைக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் சமீபத்தில் தடை விதித்தது.

இந்நிலையில், பயணியரின் பாதுகாப்பு மற்றும் டிரைவரின் நலன் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், புதிய மோட்டார் வாகன ஒருங்கிணைப்பாளர் வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை நேற்று முன்தினம் வெளியிட்டது. அதன் விபரம்:

இருசக்கர வாகனங்களை, 'ரேபிடோ, ஓலா, ஊபர்' போன்ற நிறுவனங்களுடன் இணைத்து, பொது மக்கள் பயணிக்க மாநில அரசுகள் அனுமதி அளிக்கலாம். இதன் வாயிலாக, போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகனங்களால் ஏற்படும் மாசு குறையும். இதுதவிர, பயணியரும், குறைந்த செலவில் தங்கள் பயணங்களை மேற்கொள்ள முடியும்.

தினசரி, வாராந்திர அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை பயணங்களை மேற்கொள்ள அனுமதிக்கும் அங்கீகாரங்களை அந்நிறுவனங்களுக்கு வழங்கும்பட்சத்தில், அதற்குரிய கட்டணங்களையும் விதிக்கலாம். இதன் வாயிலாக, மாநில அரசுகளுக்கு வருவாய் கிடைக்க வழி உள்ளது.

இந்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை மாநில அரசுகள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்றாலும், இதற்கான சட்டப்பூர்வ உரிமையை இது வழங்குகிறது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us