Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/போலீஸ் செய்திகள்/

போலீஸ் செய்திகள்/

போலீஸ் செய்திகள்/

போலீஸ் செய்திகள்/

ADDED : ஜன 12, 2024 12:37 AM


Google News
புகையிலை பாக்கெட் பறிமுதல்: இருவர் கைது

சாத்துார்: சாத்துார் அருகே பனையடிபட்டியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி, 47. இவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் இருந்து 60 புகையிலை பாக்கெட்டும் புல்லக்கவுண்டன்பட்டி சேர்ந்தவர் ராமானுஜம், 79. இவரது பெட்டிக்கடையில் இருந்து 45 புகையிலை பாக்கெட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்து கைது செய்தனர். ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.

விபத்தில் காயம்

சாத்துார்: வெம்பக்கோட்ைட முத்துச்சாமிபுரத்தை சேர்ந்தவர் சங்கரநாராயணன், 31. டிப்பர் லாரி டிரைவர். ஆலங்குளம் - வெம்பக்கோட்டை ரோட்டில் டிப்பர் லாரி ஓட்டிச் சென்ற போது எட்டக்காபட்டியை சேர்ந்த சக்கன், 46. மது போதையில் வேகமாகவும் கவனக்குறைவாக டூவீலர் ஓட்டி (ஹெல்மெட் அணியவில்லை) வந்து லாரி பின்னால் மோதினார். தலையில் படுகாயம் அடைந்தார். கல்லமநாயக்கர் பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆலங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.

முதியவர் உடல் கண்டெடுப்பு

விருதுநகர்: விருதுநகர் - பஜார் போலீஸ் ஸ்டேஷனிற்கு எதிரே பயன்பாடு இல்லாத கட்டடத்தில் அடையாளம் தெரியாத 65 வயதுடைய முதியவர் உடல் கிடைத்துள்ளது. ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நெசவாளர் காலனி 8 வது தெருவை சேர்ந்தவர் சவுந்தர்யா, 24, இவர் பி.ஏ., படித்துவிட்டு வேலை கிடைக்காமல் வீட்டில் இருந்துள்ளார். வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததால், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்தார். மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று இறந்தார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

முதியவர் காயம்

சிவகாசி: சிவகாசி திருத்தங்கல் இந்திரா நகரை சேர்ந்தவர் கருப்பசாமி 68. லோடுமேன் வேலை செய்து வரும் இவர் வேலைக்கு செல்வதற்காக ரோட்டில் நடந்து சென்ற போது மேல ரத வீதியைச் சேர்ந்த மதிவாணன் 33, ஓட்டி வந்த டூவீலர் மோதியதில் காயமடைந்தார். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.

டூவீலர் திருட்டு

சிவகாசி: சிவகாசி கொங்கலாபுரத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன் 30. இவர் தனது டூ வீலரை இரவு வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். மறுநாள் பார்க்கையில் டூவீலர் திருடு போயிருந்தது. டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

குட்கா பறிமுதல்: இருவர் கைது

சிவகாசி: சிறப்பு எஸ்.ஐ., தங்கேஸ்வரன் தனிப்படையினர் சிவகாசி விஸ்வநத்தத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நடுவூரைச் சேர்ந்த சரவணகுமார் 25 ஓட்டி வந்த டூ வீலரை சோதனை செய்கையில் ரூ. 28 ஆயிரம் மதிப்பில் 51 கிலோ தடை புகையிலை பொருட்கள் வைத்திருந்தார். விசாரணையில் விஸ்வநத்தத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. டவுன் போலீசார் இருவரையும் கைது செய்து புகையிலை பொருட்கள், டூவீலரை பறிமுதல் செய்தனர்.

வாலிபர் மீது போக்சோ

சேத்துார்: சேத்துார் அருகே கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி22. இவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த ஊரை சேர்ந்த சிறுமியுடன் இன்ஸ்டாகிராமில் பழகியுள்ளார். அலைபேசியில் பேசி வந்ததை சிறுமியின் வீட்டில் கண்டித்ததால் யாருக்கும் தெரியாமல் சிவகாசிக்கு டூவீலரில் கருப்பசாமி அழைத்துச் சென்றார். செல்லும் வழியில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். ராஜபாளையம் மகளிர் போலீசார் போக்சோவில் அவர்மீது வழக்கு பதிந்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us