/உள்ளூர் செய்திகள்/கடலூர்/வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழாவீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
ADDED : ஜன 12, 2024 03:56 AM

கடலுார்: கடலுார் வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.கடலுார், திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்திப் பெற்ற வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி முன்னிட்டு நேற்று காலை 8:00 மணிக்கு ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம், 11:00 மணிக்கு தீபாராதனை நடந்தது.ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். உபயதாரர் ஜி.ஆர்.கே.எஸ்டேட் நிர்வாக இயக்குனர் துரைராஜ், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.இரவு ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை ஜி.ஆர்.கே.எஸ்டேட் நிர்வாக இயக்குனர் துரைராஜ், இயக்குனர்கள் கோமதி துரைராஜ், கோகுல் ராதாகிருஷ்ணன் மற்றும் தேவநாதன் பட்டர் செய்திருந்தனர்.கடலுார், புதுப்பாளையம் ராஜகோபால சாமி கோவிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை முடிந்து வடைமாலை சாற்றப்பட்டது. ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சரவண ரூபன் செய்திருந்தார்.டி.குமராபுரம் 41 அடி உயர காரியசித்தி ஆஞ்சநேயர் கோவிலில் பால், தேன், தயிர் உள்ளிட்ட 27 பொருட்களால் சிறப்பு அபிஷேகம், திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, பாலாபிஷேகம் மற்றும் வஸ்திரம் சாற்றப்பட்டு, தீபாராதனை நடந்தது.