Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/தை பிறந்தால் வழி பிறக்கும்

தை பிறந்தால் வழி பிறக்கும்

தை பிறந்தால் வழி பிறக்கும்

தை பிறந்தால் வழி பிறக்கும்

ADDED : ஜன 12, 2024 05:02 PM


Google News
Latest Tamil News
* காலசக்கரத்தின் பத்தாவது ராசி மகரம்.

* பன்னிரு மாதங்களில் பத்தாவது இடத்தில் இருப்பது தை மாதம்.

* தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தொன்று தொட்டு வரும் நம்பிக்கைக்குரிய பழமொழி.

* இம்மாதத்திற்கு அறுவடை மாதம் என பெயர் உண்டு.

* இம்மாதத்தில் இருந்து தான் உத்ராயண காலம் தொடங்குகிறது.

* மகர ராசியில் சூரியன் பிரவேசிக்கும் முப்பதும் நாளும் ஹிந்து மக்களால் கோயில்களில் நிகழ்த்தப் பெறும் வழிபாடுகள் சிறப்பு வாய்ந்தவை.

* தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல், தை அமாவாசை, தைப்பூசம் போன்ற விழாக்களும், சபலா ஏகாதசி, புத்ரதா ஏகாதசி, பைரவர்,

வீரபத்திரர், சாவித்ரி, கவுரிக்கு பக்தர்களால் விரதங்கள் மேற்கொள்ளப்படுகிறது.

* தை மாதம் வளர்பிறை ஏழாவது திதியான சப்தமி திதியில் சூரிய பகவானுக்கு நிகழ்த்தப்பெறும் ரத சப்தமி என்னும் வழிபாடு சங்க காலத்தில் இருந்து புகழ் பெற்றது.

* துறவிகளுக்கு ராஜாவான நமச்சிவாய மூர்த்திகளின் குருபூஜை தினம் 'மகரதலைநாளாக' தை அசுபதி நாளில் கொண்டாடப் பெறுகின்றன.

* சபரி மலையில் ஐயப்பன் ஜோதியாக மகர சங்கராந்தி என்னும் தை முதல் நாள் அன்று காட்சி தருகிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us