ADDED : ஜன 12, 2024 06:42 AM
மூணாறு : மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான கடலார் எஸ்டேட் வெஸ்ட் டிவிஷனில் தொழிலாளர்களின் வீடுகளில் தீப்பற்றி எட்டு வீடுகள் சேதமாகியது.
அங்கு எட்டு வரிசை வீடுகளைக் கொண்ட ஒரு வீட்டில் நேற்று இரவு 8:00 மணிக்கு திடிரென தீப்பற்றியது. தீ வேகமாக எட்டு வீடுகளிலும் பரவி எரிந்து முற்றிலும் சேதமடைந்தது. அதில் ஏழு வீடுகளில் தொழிலாளர்கள் குடுத்தினருடன் வசித்தனர். தீப்பற்றியதை அறிந்து வீடுகளை விட்டு வெளியேறியதால் அனைவரும் உயிர் தப்பினர். இருப்பினும் ஏழு வீடுகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்தது.மூணாறு தீயணைப்பு துறையினர் தொழிலாளர்களின் உதவியுடன் தீயை அணைத்தனர். மின் கசிவு மூலம் தீப்பற்றியதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.