/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பொங்கல் பரிசு தொகுப்பு பெறும் நாள் நீடிக்கப்படுமா?பொங்கல் பரிசு தொகுப்பு பெறும் நாள் நீடிக்கப்படுமா?
பொங்கல் பரிசு தொகுப்பு பெறும் நாள் நீடிக்கப்படுமா?
பொங்கல் பரிசு தொகுப்பு பெறும் நாள் நீடிக்கப்படுமா?
பொங்கல் பரிசு தொகுப்பு பெறும் நாள் நீடிக்கப்படுமா?
ADDED : ஜன 12, 2024 12:58 AM
திருப்பூர்;'வெளியூர் கார்டுதாரர்கள் பயன்பெறும் வகையில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் தேதியை நீட்டிக்க வேண்டும்' என, ரேஷன்கார்டுதாரர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் கார்டுதாரர்களுக்கு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவற்றுடன், 1,000 ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது. வரும், 14ம் தேதிக்குள் வாங்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏராளமான மக்கள், வேலை வாய்ப்புக்காக தங்கள் சொந்த ஊரை விட்டு வெளியூரில் தங்கி வேலை செய்கின்றனர். அவர்களது, ரேஷன் கார்டு முகவரி, அவர்களது சொந்த ஊரை கொண்டதாகவே உள்ளது. ரேஷன் கார்டில் சொந்த ஊர் முகவரியை கொண்டு, வெளியூரில் வசிக்கும் மக்கள், மத்திய அரசின் 'ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில், தாங்கள் வசிக்கும் ஊரில் உள்ள ரேஷன் கடைகளிலேயே ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்கின்றனர்.
ஆனால், பொங்கல் பரிசுத் தொகை உள்ளிட்ட அரசின் சிறப்பு திட்டங்களின் கீழ் பயன் பெற, தங்களின் சொந்த ஊரில், சம்பந்தப்பட்ட ரேஷன் கடைக்கே செல்ல வேண்டியிருக்கிறது. அனைவராலும், வரும், 14ம் தேதிக்குள் சென்று, பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றுக் கொள்ள முடியாது என்ற நிலையில், இம்மாதம் முழுவதும், பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பரிசுத்தொகைவழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வெளியூரில் வசிப்போர் எதிர்பார்க்கின்றனர்.