/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தொழிலாளர்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 8 ஆயிரம் பேர் இலக்குதொழிலாளர்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 8 ஆயிரம் பேர் இலக்கு
தொழிலாளர்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 8 ஆயிரம் பேர் இலக்கு
தொழிலாளர்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 8 ஆயிரம் பேர் இலக்கு
தொழிலாளர்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 8 ஆயிரம் பேர் இலக்கு
ADDED : ஜன 11, 2024 10:50 PM
பொள்ளாச்சி;'தொழிலாளர்களை தேடி மருத்துவம்' என்கிற திட்டம், கோவை மாவட்டத்தில் துவக்கப்பட்டது. முதல்கட்டமாக, 14 தொழிற்சாலைகளை சேர்ந்த, 8,000 தொழிலாளர்கள் பயனடைய உள்ளனர்.
தொற்றா நோய்களின் நோய் விகிதம் மற்றும் இறப்பு விகிதத்தை குறைக்க, 'மக்களை தேடி மருத்துவம்' என்கிற திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதில், தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்குஇச்சேவை கிடைக்காமல் போய் விடுகிறது.அதனால், பணியிடம் சார்ந்த பரிசோதனைஎன்கிற திட்டம் துவக்கப்பட்டிருக்கிறது.
தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட தொற்றா நோய் பரிசோதனைகளை, முதல்கட்டமாக, 711 தொழிற்சாலைகளில், 853 லட்சம் தொழிலாளர்களுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்தந்த தொழிற்சாலைகளில் பரிசோதனை செய்யப்படும்.
தொற்றாநோய் கண்டறியப்படுவோருக்கு இ.எஸ்.ஐ., அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டு, ரத்த பரிசோதனை செய்யப்படும். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் கண்டறியப்பட்டால்,உரிய மருத்துவ ஆலோனை, சிகிச்சை அளிக்கப்படும்.
கோவை மாவட்டத்தில், 14 தொழிற்சாலைகளை சேர்ந்த, 8,000 தொழிலாளர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில், முதல்கட்டமாக ஒரு நிறுவனத்தில், இத்திட்டம் துவக்கப்பட்டது; மற்ற நிறுவனங்களில் விரைவில் துவக்கப்படும் என, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.