டாக்டருக்கு ஆபாச மெயில் விசாரிக்க கவர்னர் உத்தரவு
டாக்டருக்கு ஆபாச மெயில் விசாரிக்க கவர்னர் உத்தரவு
டாக்டருக்கு ஆபாச மெயில் விசாரிக்க கவர்னர் உத்தரவு
ADDED : ஜன 12, 2024 12:39 AM
புதுச்சேரி:புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் உள்ளிருப்பு டாக்டராக பயிற்சி பெற்று வரும் பெண் டாக்டர் ஒருவருக்கு கடந்த செப்., 29ம் தேதி மர்ம நபர் ஒருவர் போலி ஐ.டி.,யில் ஆபாச மெயில் அனுப்பியுள்ளார்.
அதில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தன்னை சந்திக்க வேண்டும் என்றும், இல்லையெனில் எம்.டி., முதலாம் ஆண்டு படிப்பை தொடர முடியாது என்றும் கூறப்பட்டிருந்தது.
அதேபோல், மருத்துவ கல்லுாரி மாணவியருக்கு ஆபாச மெயில் வந்துள்ளது. இதுபற்றி, பெண் டாக்டர் ஜிப்மரில் உள்ள பெண் வன்கொடுமை தடுப்பு பிரிவு, சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் செய்தார்.
மூன்று மாதம் ஆன நிலையில், புகார் மீது எந்த நடவடிக்கை இல்லை. பெண் டாக்டர், கவர்னர் தமிழிசையிடம் புகார் அளித்தார். அவர் விசாரணை நடத்த ஜிப்மர் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.