Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ செங்கை மாவட்டத்தில் 39 நீர்த்தேக்க தொட்டி மத்திய அரசு திட்டத்தில் பணிகள் சுறுசுறுப்பு

செங்கை மாவட்டத்தில் 39 நீர்த்தேக்க தொட்டி மத்திய அரசு திட்டத்தில் பணிகள் சுறுசுறுப்பு

செங்கை மாவட்டத்தில் 39 நீர்த்தேக்க தொட்டி மத்திய அரசு திட்டத்தில் பணிகள் சுறுசுறுப்பு

செங்கை மாவட்டத்தில் 39 நீர்த்தேக்க தொட்டி மத்திய அரசு திட்டத்தில் பணிகள் சுறுசுறுப்பு

ADDED : ஜன 08, 2025 12:33 AM


Google News
Latest Tamil News
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், மத்திய அரசு திட்டமான,'ஜல் - ஜீவன்' திட்டத்தில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணிகள் வேகமெடுத்து உள்ளன. கடந்த ஆண்டு நிலுவையில் உள்ள பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் அச்சிறுபாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், புனிததோமையார்மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 359 ஊராட்சிகள் உள்ளன.

இந்த ஊராட்சிகளில், மத்திய அரசின் திட்டமான,'ஜல்- ஜீவன்' திட்டத்தில், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கி, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து, ஊராட்சிகளில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் சிதலமடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளன.

இந்த தொட்டிகளில் தண்ணீர் ஏற்றும் போது, வீணாகி வருகிறது. இதனால், புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டித்தர வேண்டும் என, மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர்.

அதன் பின், ஊராட்சிகளில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டித் தர, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, ஊராட்சிகளில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் நிலை குறித்து, வட்டார வளர்ச்சி பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

ஜல் - ஜீவன் திட்டத்தில் 2020-21ம் ஆண்டு, எட்டு ஒன்றியங்களில், 79 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட 12.18 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

2022-23ம் ஆண்டில், 164 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்ட, 32 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இப்பணிகளுக்கு, டெண்டர் விடப்பட்டு பணிகள் முடிந்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

2023-24ம் ஆண்டு, 78 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்ட 17.17 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு, 55 பணிகள் நிறைவு பெற்றன. 23 பணிகள் மந்தமாக நடைபெற்று வருகின்றன.

இதே திட்டத்தில் தற்போது, 2024-25ம் ஆண்டில், 39 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட, 9.43 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இப்பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கி, டெண்டர் விடப்பட்டது. இப்பணிகளை, தனியார் ஒப்பந்ததாரர்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை விரைந்து கட்டி முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2023- 24ம் ஆண்டில், 78 பணிகளில், 55 பணிகள் முடிந்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு உள்ளன. 23 பணிகள் நடைபெற்று வருகின்றன. 2024-25ம் ஆண்டிற்கான, 39 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணிகள் துவங்கி, வேகமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை விரைந்து முடிக்க, ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

- ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள்,

செங்கல்பட்டு.

2024-25ல் 39 நீர்த்தேக்க தொட்டி அமையுமிடம்


ஊராட்சி ஒன்றியம் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி ரூ.கோடி
அச்சிறுப்பாக்கம் 3 0.55மதுராந்தகம் 8 1.70
சித்தாமூர் 4 0.85லத்துார் 9 1.78
திருக்கழுக்குன்றம் 1 0.18
திருப்போரூர் 3 0.89
காட்டாங்கொளத்துார் 7 1.98
புனிததோமையார்மலை 4 1.47
மொத்தம் 39 9.43







      Our Apps Available On




      Dinamalar

      Follow us