/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் பணிபுரியும் தொழிலாளர்கள்பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் பணிபுரியும் தொழிலாளர்கள்
பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் பணிபுரியும் தொழிலாளர்கள்
பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் பணிபுரியும் தொழிலாளர்கள்
பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் பணிபுரியும் தொழிலாளர்கள்
ADDED : ஜன 11, 2024 09:52 PM

இருங்காட்டுக்கோட்டை:காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருங்காட்டுக்கோட்டை, பிள்ளைப்பாக்கம், ஸ்ரீபெரும்புதுார், வல்லம், ஒரகடம் ஆகிய பகுதியில் சிப்காட் தொழிற் பூங்கா அமைந்துள்ளது.
இங்கு, 1,000த்திற்கும்மேற்பட்ட தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளின் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
இதுதவிர, ஏற்கனவே உள்ள தொழிற்சாலைகளின் மேற்கூரைகள் சீரமைக்கும் பணிகளும் ஒப்பந்ததாரர்கள் வாயிலாக நடக்கின்றன. கட்டுமானம் மற்றும் மேற்கூரை சீரமைக்கும் பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுப்படுத்தப்படுகின்றனர்.
இவர்களுக்கு, தலைக்கவசம், பாதுகாப்பு உடை, சேப்டி ஷூ உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக வழங்கப்படுவதில்லை.
கட்டடங்கள் மீது ஏரி பணியாற்றும் தொழிலாளர்கள் தவறி விழுந்து இறக்கும் சம்பவம் தொடர் கதையாக நடந்து வருகிறது.
எனவே, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி தொழிலாளர்களை பணியில் அமர்த்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.