Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோரை காப்பாற்ற செயற்கை சுவாச சிகிச்சை தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முதல்வர் தகவல்

தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோரை காப்பாற்ற செயற்கை சுவாச சிகிச்சை தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முதல்வர் தகவல்

தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோரை காப்பாற்ற செயற்கை சுவாச சிகிச்சை தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முதல்வர் தகவல்

தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோரை காப்பாற்ற செயற்கை சுவாச சிகிச்சை தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முதல்வர் தகவல்

ADDED : ஜன 12, 2024 06:39 AM


Google News
Latest Tamil News
தேனி : மாவட்டத்தில் பாம்பு கடித்து, விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சியில் ஈடுபடுவோரின் உயிரை காக்க சிறப்பு அதிதீவிர செற்கை சுவாச சிகிச்சை பிரிவு துவக்கப்பட்டுள்ளது என தேனி மருத்துவக கல்லுாரி முதல்வர் பாலசங்கர் தெரிவித்தார்.

தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் இளங்கலை மருத்துவம் 100 மாணவ, மாணவிகள், முதுகலை மருத்துவப் படிப்பில் 150 பேர் என, 250 பேர் படிக்கின்றனர். பேராசிரியர்கள், ஊழியர்கள், பணியாளர்கள் 439 பேர் உள்ளனர். தேனி மாவட்டம் மட்டும் இன்றி, கேரளா, இடுக்கி மாவட்டத்தில் இருந்து தினமும் 1400 பேர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையின் செயல்பாடுகள், புதிய திட்டங்கள், வைரல் காய்ச்சல் தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, தினமலர் நாளிதழ் அன்புடன் அதிகாரி' பகுதிக்காக பேசியதாவது:

தற்கொலை முயற்சி செய்வோர் உயிரிழப்பை தடுக்க திட்டம் உள்ளதா


மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு மாதந்தோறும் விஷம் குடித்து, துாக்கிட்டு, பாம்பு கடித்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று சராசரியாக 25 பேர் இறப்பது வேதனையானது. இதில் 99 சதவீதம் பேர் வளரிளம் பருவத்தினர். இதனை தவிர்க்க மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சுவாசத்திற்கான அதிநவீன வெண்டிலேசன் கருவியுடன் சிறப்பு தீவிர செயற்கை சுவாச சிகிச்சை பிரிவு துவக்கப்பட்டுள்ளது. இங்கு 24 மணி நேரமும் மயக்கவியல் டாக்டர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், நர்ஸ்கள் சுழற்சி முறையில் பணியில் உள்ளனர். இதனால் உயிரிழப்பை முடிந்தளவு தடுக்கிறோம். உயிர் பிழைத்தவர்களுக்கு ஆற்றுப்படுத்துதல் ஆலோசனை வழங்கி தற்கொலை எண்ணத்தில் இருந்து வெளி கொண்டு வருகிறோம்.

மாவட்டத்தில் இன் ப்ளுயன்சா வைரஸ்' காய்ச்சல் அதிகமாக பரவுகிறதே.


எளிதில் பரவும் வைரஸ் காய்ச்சல் இது. லேசான சளி, தொண்டை வலி, இருமல் பாதிப்பு இருந்தாலும், அது அதிகரித்தாலும் வைரஸ் காய்ச்சல்' வரலாம். பாதிப்பு ஏற்பட்ட 90 சதவீதம் பேருக்கு லேசான அறிகுறிகளாகவே உள்ளன. ஜூலை துவங்கி கோடை துவங்குவதற்கு முன் வரை இதன் பாதிப்பு இருக்கும். இதனால் அறிகுறி தென்பட்ட உடன் டாக்டர்களிடம் ஆலோசனை பெறுவது அவசியம். சமீபநாட்களாக வெப்பம் இன்றி மழை பெய்ததால் சீதோஷ்ண நிலை மாறி, மாறி உள்ளதால் அதிகளவில் வைரஸ் காய்ச்சல் பரவுகிறது. இதற்கும் முககவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுவது, தண்ணீரை கொதிக்க வைத்து பருகுவது அவசியம்.தினமும் நான்கைந்து பேர் உள்நோயாளிகளாக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். அறிகுறி தோன்றியவுடன் டாக்டர்களை பார்ப்பது அவசியம்.

விபத்தில் சிக்கி தலைக்காய சிகிச்சைக்காக வருவோர் டாக்டர் இன்றி இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறதே


மருத்துவக் கல்லுாரியில் தலைக்காய சிகிச்சை பிரிவு உள்ளது. இதற்கான சிறப்பு டாக்டர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், நர்ஸ்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் தற்போது தலைக்காய அறுவை சிகிச்சைக்கான டாக்டர் ஒருவர் பணியில் இல்லாததால், விபத்தில் பாதிக்கப்பட்டு தலை காயத்துடன் வரும்போது, மதுரை அரசு மருத்துவக் கல்லுாரிக்கு பரிந்துரைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது. அரசு தலைக்காய அறுவை சிகிச்சை டாக்டர், மயக்கவியல் டாக்டர் உட்பட உள்ளிட்ட டாக்டர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும். அரசுக்கு இதன் விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெங்கு பாதிப்பு குறித்து


டெங்குவிற்கு தனி வார்டு அமைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுவரை 3 குழந்தைகள் உட்பட 7 பேர் வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குடிநீர் பிரச்னை எப்போது தீரும்


குன்னுார் உறை கிணறு மூலமாகவும், வைகை அணையில் இருந்து நேரடியாகவும் 5 லட்சம் லிட்டர் தண்ணீர் சப்ளையாக வேண்டும். தற்போது வரை பிரச்னை இல்லை. கூடுதலாக தேவையிருந்தால் கலெக்டரிடம் வலியுறுத்தி கூடுதலாக நீரை பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us