/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/3 வேளாண் உதவி இயக்குனர் பணியிடம் காலி திருத்தணி கோட்ட விவசாயிகள் தவிப்பு3 வேளாண் உதவி இயக்குனர் பணியிடம் காலி திருத்தணி கோட்ட விவசாயிகள் தவிப்பு
3 வேளாண் உதவி இயக்குனர் பணியிடம் காலி திருத்தணி கோட்ட விவசாயிகள் தவிப்பு
3 வேளாண் உதவி இயக்குனர் பணியிடம் காலி திருத்தணி கோட்ட விவசாயிகள் தவிப்பு
3 வேளாண் உதவி இயக்குனர் பணியிடம் காலி திருத்தணி கோட்ட விவசாயிகள் தவிப்பு
ADDED : ஜன 11, 2024 09:34 PM
திருத்தணி:திருத்தணி வருவாய் கோட்டத்தில், திருத்தணி, திருவாலங்காடு, பள்ளிப்பட்டு மற்றும் ஆர்.கே.பேட்டை ஆகிய நான்கு ஒன்றியங்கள் உள்ளன. ஒவ்வொரு ஒன்றியத்திலும்வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் இயங்கி வருகிறது.
இந்த அலுவலகத்தில் ஒரு உதவி இயக்குனர், நான்கு முதல் ஐந்து வேளாண் உதவி அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் கிராமங்களுக்கு நேரில் சென்று விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு மற்றும் அதிக விளைச்சல் தரும் பயிறு வகைகள் குறித்து விளக்கி கூறுவர். மேலும், அரசு சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் சலுகை மற்றும் மானியம் குறித்து வேளாண் உதவி அலுவலர்கள் விவசாயிகளிடம் எடுத்துக்கூறி பயன்பெற செய்ய வேண்டும்.
இவர்களை வேளாண் உதவி இயக்குனர் கண்காணித்தும், வேளாண் துறைக்கு வரும் திட்டங்கள் குறித்து மாதந்தோறும்விவசாயிகள் கூட்டம் நடத்தி தெரிவிப்பர்.
இந்நிலையில் கடந்த ஆறு மாதமாக, திருத்தணி, திருவாலங்காடு மற்றும் பள்ளிப்பட்டு ஆகிய மூன்று வேளாண் உதவி இயக்குனர் பணியிடம் காலியாக உள்ளது.
தற்போது ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் மட்டும் ஒரு வேளாண் உதவி இயக்குனர் பணியாற்றி வருகிறார்.
இவரும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் நடைபெறும் கூட்டம் மற்றும் ஆய்வு கூட்டங்களுக்கு சென்று விடுவதால் மாதந்தோறும் விவசாயிகளின் ஆலோசனை கூட்டம் நடத்துவதில்லை.
இதனால் பெரும்பாலான விவசாயிகளுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் சலுகைகள் அறிய முடியாமல் தவிக்கின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, காலியிடங்களை நிரப்ப வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்கின்றனர்.