/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சர்வதேச வில்வித்தை; கோவை மாணவருக்கு வெள்ளிசர்வதேச வில்வித்தை; கோவை மாணவருக்கு வெள்ளி
சர்வதேச வில்வித்தை; கோவை மாணவருக்கு வெள்ளி
சர்வதேச வில்வித்தை; கோவை மாணவருக்கு வெள்ளி
சர்வதேச வில்வித்தை; கோவை மாணவருக்கு வெள்ளி
ADDED : ஜன 11, 2024 11:34 PM

கோவை:மலேசியாவில் நடந்த சர்வதேச அளவிலான வில்வித்தை போட்டியில் கோவை சி.எம்.சி., பள்ளி மாணவர் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
மலேசியா, பேராக் மாநிலத்தில் உள்ள ஈப்போவில், பேராக் மாநில வில்வித்தை சங்கம் சார்பில் அழைப்பிதழ் வில்வித்தை போட்டி நடந்தது.
இப்போட்டியில் மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளை சேர்ந்த 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதன், 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான 'ரிக்கோ வில்' பிரிவில் சி.எம்.சி., சர்வதேச பள்ளியில் படிக்கும் கவுசிக் மாரன் இந்தியா சார்பில் பங்கேற்றார்.
தகுதி சுற்று மற்றும் அரையிறுதிப்போட்டிகளில் சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்கு சென்ற கவுசிக், இறுதிப்போட்டியில் 18 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
சர்வதேச போட்டியில் வெள்ளி வென்ற மாணவரை சி.எம்.சி., பள்ளி தாளாளர் லிமா ரோஸ், முதல்வர் ஸ்ரீ பாக்கியலட்சுமி உள்ளிட்டோர் பாராட்டினர்.