/உள்ளூர் செய்திகள்/தேனி/ரயில்வே சுரங்க பாலத்தில் தேங்கிய மழை நீரால் பாதிப்புரயில்வே சுரங்க பாலத்தில் தேங்கிய மழை நீரால் பாதிப்பு
ரயில்வே சுரங்க பாலத்தில் தேங்கிய மழை நீரால் பாதிப்பு
ரயில்வே சுரங்க பாலத்தில் தேங்கிய மழை நீரால் பாதிப்பு
ரயில்வே சுரங்க பாலத்தில் தேங்கிய மழை நீரால் பாதிப்பு
ADDED : ஜன 12, 2024 06:45 AM

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி - மேக்கிழார்பட்டி ரோட்டில் உள்ள ரயில்வே சுரங்க பாலத்தில் தேங்கிய மழை நீரை அப்புறப்படுத்த முடியாதததால் பலருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
ஆண்டிபட்டி - தெப்பம்பட்டி ரோடு, ஆண்டிபட்டி - ஏத்தக்கோயில் ரோடு, ஆண்டிபட்டி - மேக்கிழார்பட்டி ரோடு இவைகளில் ரயில்வே சுரங்க பாலம் உள்ளது. சிறு மழை பெய்தாலும் சுரங்க பாலத்தில் தேங்கும் நீரை மோட்டார் மூலம் உறிஞ்சி வெளியேற்ற வேண்டிய உள்ளது. கடந்த சில நாட்களில் பெய்த மழையில் தேங்கிய நீர் அவ்வப்போது வெளியேற்றப்பட்டது. மேக்கிழார்பட்டி ரோட்டில் உள்ள பாலம் அருகே தேங்கி நிற்கும் நீர் கசிந்து சுரங்க பாலத்தில் தேங்குகிறது. மோட்டார் மூலம் உறிஞ்சி வெளியேற்றினாலும் சில மணி நேரங்களில் மீண்டும் சேர்ந்து விடுகிறது. நீர் தேக்கத்திலிருந்து பாலத்திற்கு வரும் நீர் கசிவை சரி செய்ய மாற்று நடவடிக்கை ரயில்வே நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். ரயில்வே பாலத்தில் தொடர்ந்து நீர் பல நாட்களாக நீர் தேங்கி நிற்பதால் மேக்கிழார்பட்டி, கூத்தமேடு வழியாக ஏத்தக்கோயில், சித்தையகவுண்டன்பட்டி, ரங்கராம்பட்டி, அனுப்பபட்டி ஆகிய கிராமங்களுக்கு செல்பவர்கள் பாதிப்படைகின்றனர்.