/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியில் பொங்கல் விழாசச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியில் பொங்கல் விழா
சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியில் பொங்கல் விழா
சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியில் பொங்கல் விழா
சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியில் பொங்கல் விழா
ADDED : ஜன 12, 2024 12:14 AM

கோவை;மேட்டுப்பாளைம், கல்லாறு பகுதியில் உள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
விழாவில் சச்சிதானந்தர் பொங்கல், சூரியப் பொங்கல், குடும்பப் பொங்கல், ஆசிரியர் பொங்கல், மாணவர் பொங்கல் என ஐந்து பொங்கல் வைத்துச் சூரியனுக்குப் படைத்தனர். கோ பூஜை நடத்தி, பொங்கல் வழங்கி வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டனர். தொடர்ந்து, மாணவ மாணவியர்களுக்கு பல்வேறு பாரம்பரிய போட்டிகள் நடத்தப்பட்டன.பொங்கல் விழாவில், பள்ளி செயலாளர் கவிதாசன், கல்வி ஆலோசகர் கணேசன், முதல்வர் உமாமகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல், ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி தமிழாசிரியர் சிவக்குமார், ஆங்கில ஆசிரியை கீதா ஆகியோர் செய்திருந்தனர்.