ஹிந்து மக்களின் மனதை புண்படுத்துகிறது காங்கிரஸ் முன்னாள் முதல்வர் எடியூரப்பா வேதனை
ஹிந்து மக்களின் மனதை புண்படுத்துகிறது காங்கிரஸ் முன்னாள் முதல்வர் எடியூரப்பா வேதனை
ஹிந்து மக்களின் மனதை புண்படுத்துகிறது காங்கிரஸ் முன்னாள் முதல்வர் எடியூரப்பா வேதனை
ADDED : ஜன 11, 2024 11:28 PM

பெங்களூரு: ''ராமலல்லா டிரஸ்ட் அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்தும், அதை நிராகரித்ததன் மூலம், கோடிக்கணக்கான ஹிந்துக்களின் உணர்வை, காங்கிரஸ் புண்படுத்தியுள்ளது, என பா.ஜ., முன்னாள் முதல்வர் எடியூரப்பா குற்றம்சாட்டினார்.
பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:
உத்தர பிரதேசம், அயோத்தியில் ஜனவரி 22ல் ராமர் கோவில் திறப்பு விழா நடக்கவுள்ளது. இதில் பங்கேற்கும்படி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும், மூத்த தலைவர் சோனியாவுக்கும், ராமலல்லா டிரஸ்ட் அழைப்பு விடுத்தது.
ஆனால் காங்கிரஸ் தலைவர்கள், தேவையற்ற காரணங்களை கூறி, நிகழ்ச்சியை புறக்கணித்திருப்பது, ஹிந்துக்களுக்கு செய்த அவமதிப்பாகும்.
ராமர் கோவில் திறப்பு விழா மற்றும் ராமர் விக்ரகம் பிரதிஷ்டை செய்யும் சிறப்பான நாளுக்காக நாம் காத்திருக்கிறோம். ஆனால் காங்கிரசாருக்கு அழைப்பு விடுத்தும், செல்ல வேண்டாம் என, முடிவு செய்திருப்பது துரதிர்ஷ்டவசமாகும். அந்த கட்சியின் முடிவை நான் கண்டிக்கிறேன்.
ராமனின் கனவு நனவாக வேண்டும். ஆனால் கோடிக்கணக்கான ஹிந்துக்களின் உணர்வை, புண்படுத்தும் செயலை காங்கிரஸ் செய்கிறது. இது பெருங்குற்றமாகும்.
காங்கிரசார் என்ன காரணத்துக்காக, ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு செல்வதில்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டும். சோனியா, ராகுல், சித்தராமையா போன்றவர்கள் சேர்ந்து, ஒரு நற்பணியில் கல்லை போடுகின்றனர். இவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.