ADDED : ஜன 11, 2024 10:42 PM
பெ.நா.பாளையம்:கோவை துடியலூர் அருகே என்.ஜி.ஜி.ஓ., காலனியில் நாயர்ஸ் வித்யா மந்திர் பள்ளி உள்ளது. இங்கு, 9ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஸ்ரீஜித், நேபாளம் நாட்டு தலைநகரமான காட்மண்டில் நடந்த இந்தோ-நேபால் கராத்தே சாம்பியன்ஷிப் ஜூனியர் பிரிவு போட்டியில் பங்கேற்று, முதல் இடத்தை பெற்றார்.
இவருக்கு, பதக்கமும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. சாம்பியன் பட்டம் பெற்ற மாணவரை நாயர்ஸ் பள்ளி தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.