/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மாசு குறைக்கும் டீசல் நீராவி இன்ஜின்; மலை ரயில் பாதையில் சோதனை ஓட்டம் மாசு குறைக்கும் டீசல் நீராவி இன்ஜின்; மலை ரயில் பாதையில் சோதனை ஓட்டம்
மாசு குறைக்கும் டீசல் நீராவி இன்ஜின்; மலை ரயில் பாதையில் சோதனை ஓட்டம்
மாசு குறைக்கும் டீசல் நீராவி இன்ஜின்; மலை ரயில் பாதையில் சோதனை ஓட்டம்
மாசு குறைக்கும் டீசல் நீராவி இன்ஜின்; மலை ரயில் பாதையில் சோதனை ஓட்டம்
ADDED : ஜன 08, 2025 06:35 AM

குன்னுார் : நீலகிரி மலை ரயிலில், டீசல் பயன்படுத்தி இயக்கப்படும் இன்ஜினில், மேட்டுப்பாளையம் - குன்னுார் இடையே சோதனை ஓட்டம் நடந்தது.
நுாற்றாண்டு கடந்து இயங்கும், நீலகிரி மலை ரயிலில் துவக்க காலத்தில், 'எக்ஸ் கிளாஸ்' நிலக்கரி நீராவி இன்ஜின்கள் பயன்படுத்தப்பட்டன. 'யுனெஸ்கோ' பாரம்பரிய அந்தஸ்து பெற்ற மலை ரயிலில், பயணம் செய்ய சர்வதேச சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த ரயிலில், கடந்த, 2002-ல் இருந்து ரயில் இன்ஜின், 'பர்னஸ் ஆயிலில்' இயங்கும் வகையில் மாற்றப்பட்டு மலை ரயில் இயங்கி வந்தது.
இந்நிலையில், மலை பகுதியில் சுற்றுச் சூழல் மாசு படுவதை தவிர்க்க, பர்னஸ் ஆயில் பயன்படுத்த மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்ததால், பர்னஸ் ஆயில் இன்ஜின்களை டீசல் பயன்படுத்தும் வகையில் மாற்ற ரயில்வே முடிவு செய்தது.
தொடர்ந்து, குன்னுார் பணிமனையில், சீனியர் டெக்னீசியன் மாணிக்கம் தலைமையில், மூன்று 'பர்னஸ் ஆயில்' நீராவி இன்ஜின்கள், டீசலுக்கு மாற்றப்பட்டு சிறப்பாக இயங்கி வருகின்றன.
திருச்சி பொன்மலை பணிமனையில், '37397' எண் கொண்ட 'பெட்டா குயின்' என, அழைக்கப்படும் பர்னஸ் ஆயிலில் இயங்கும் கடைசி இன்ஜின் தற்போது டீசலுக்கு மாற்றப்பட்டது. நேற்று டீசலில் இயங்கும் இன்ஜினில், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னுார் வரை, 4 பெட்டிகளுடன் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னுார் வரை, மலை ரயில் சேவைக்கு, பயன்பாட்டிற்கு இந்த இன்ஜின் விரைவில் கொண்டு வரப்படும். இதனால், சுற்றுச்சூழல் மாசுபடுவது தடுக்கப்படும்,' என்றனர்.