/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/நீலகிரியில் மன்னர் பழசி ராஜாவின் குகை; சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி!நீலகிரியில் மன்னர் பழசி ராஜாவின் குகை; சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி!
நீலகிரியில் மன்னர் பழசி ராஜாவின் குகை; சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி!
நீலகிரியில் மன்னர் பழசி ராஜாவின் குகை; சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி!
நீலகிரியில் மன்னர் பழசி ராஜாவின் குகை; சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி!

பந்தலூர்: கேரளாவின் பல பகுதிகளை ஆட்சி செய்த மன்னர் பழசி ராஜா, ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரின் போது தங்கியிருந்த குகை ஒன்று நீலகிரியில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதனை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

கேரளாவின் கோட்டயம் மற்றும் மலபார் பகுதியின் மன்னராக, கடந்த 1753ல் ஆட்சி புரிந்தவர் பழசி ராஜா. நீலகிரி மாவட்டத்தில் முதுமலை, நெலாக்கோட்டை, ஸ்ரீ மதுரை, சேரம்பாடி மற்றும் மசினகுடி இவற்றுடன் கண்ணனூர் மற்றும் வயநாடு மாவட்டத்தின் தலைச்சேரி உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கி கோட்டயம் மண்டலமாக இருந்தது. ஆங்கிலேய அரசின் வரி வசூலுக்கு எதிராக குரல் கொடுத்ததுடன், ஆங்கில அரசுக்கு எதிராக போராடியதால், மக்கள் இவருக்கு ஆதரவு அளித்தனர்.

ஆங்கிலேயப் படைகள் இவரின் கோட்டயம் அரண்மனையை சுற்றி வளைத்த போது, அங்கிருந்து வயநாடு மலைப்பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தார். 1799-ல் வயநாடு பகுதிகளை தமது ஆளுகையின் கீழ் கொண்டு வந்தார். தொடர்ந்து பழசிராஜா தனது வீரர்களுடன் வனங்களில் தங்கி போர் புரிந்தார். மேலும் குறிச்சியா பழங்குடியின மக்களை ஒன்றிணைது, ஆங்கிலேயருக்கு எதிராக போரில் பங்கேற்றார்.
அப்போது குறும்பா, பனியா பழங்குடியின மக்கள் ஆதரவு கொடுத்ததுடன், வீரர்களுக்கு தேவையான உணவு மற்றும் தங்கும் இடங்களை தயார்படுத்தி கொடுத்தனர். குறும்பா பழங்குடியின மக்கள் வில், ஆம்பு போன்ற ஆயுதங்களை போரில் பயன்படுத்தினார்கள். மேலும் வயநாடு மற்றும் நீலகிரி மலைகளில் அதிக அளவில் தங்களுக்கான தளங்களை ஏற்படுத்தினார். அதில் பந்தலூர் அருகே கோட்டமலை மற்றும் நெலாக்கோட்டை பகுதிகளில் குகைகள் அமைத்து, அதில் தனது படைகளுடன் தங்கியிருந்து ஆங்கிலேயருக்கு எதிராக கொரில்லா போர் தொடுத்தவர் பழசி ராஜா.


தொடர்ந்து அவர்களின் மூதாதையர்களை நினைவு கூர்ந்து, அந்தப் பகுதிகளை பார்வையிட்டனர். இந்த குகை 1791 -1801ம் ஆண்டு காலகட்டங்களில் அமைக்கப்பட்டு, கொரில்லா போர் தளமாக செயல்பட்டதாக வரலாற்று சான்றுகள் தெரிவிப்பதாகவும்,இந்த பகுதியை இனி சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிக்கலாம் என்றும் முறையாக இந்த குகை பார்வையாளர்களுக்கு திறந்து வைக்கப்பட்டதாகவும் எஸ்டேட் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


இது போன்ற வரலாற்று சுவடுகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், வெளிப்படுத்துவதுடன் நமது முன்னோர்களான போர் வீரர்களுக்கு மண்ணின் மைந்தர்களான பழங்குடியின மக்கள் உதவி செய்தது குறித்து தெரிந்து கொள்ள செய்ய வேண்டியதும் அவசியம் ஆகும் என்றார்.