Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ஆந்திராவில் அமைகிறது கூகுளின் முதல் செயற்கை நுண்ணறிவு மையம்: சுந்தர் பிச்சை அறிவிப்பு

ஆந்திராவில் அமைகிறது கூகுளின் முதல் செயற்கை நுண்ணறிவு மையம்: சுந்தர் பிச்சை அறிவிப்பு

ஆந்திராவில் அமைகிறது கூகுளின் முதல் செயற்கை நுண்ணறிவு மையம்: சுந்தர் பிச்சை அறிவிப்பு

ஆந்திராவில் அமைகிறது கூகுளின் முதல் செயற்கை நுண்ணறிவு மையம்: சுந்தர் பிச்சை அறிவிப்பு

Latest Tamil News
புதுடில்லி: ஆந்திராவின் விசாகபட்டினத்தில் கூகுள் நிறுவனத்தின் தகவல் மையத்துடன் கூடிய, செயற்கை நுண்ணறிவு மையம் (AI Hub) 15 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1.2 லட்சம் கோடி) முதலீட்டில் அமைகிறது என அந்நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை அறிவித்து உள்ளார்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிரமாண்ட ஏஐ மையத்தை கூகுள் நிறுவனம் அமைக்கிறது. டில்லியில் நடந்த ஏஐ தொடர்பான கருத்தரங்கில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் தெரிவித்தார். ஆசியாவில் கூகுள் நிறுவனத்தின் மிகப்பெரிய முதலீடு இந்தியாவில் அமைவது முக்கியத்துவம் பெறுகிறது. 15 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1.2 லட்சம் கோடி) முதலீட்டில் அமைகிறது.

இது குறித்து கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விசாகப்பட்டினத்தில் முதன்முதலில் அமைக்கப்படும் கூகிள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு மையம் குறித்து பிரதமர் மோடியிடம் பேசினேன்.

அவர் மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொண்டேன். இது ஒரு மைல்கல் வளர்ச்சியாகும். ஏஐ கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவோம். நாடு முழுவதும் வளர்ச்சியை முன்னெடுப்போம். இவ்வாறு சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.

பிரதமர் மோடி பெருமிதம்

இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் நகரத்தில் கூகிள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மையம் அமைய இருப்பது மகிழ்ச்சி.

இந்த மையம் வளர்ச்சி அடைந்த இந்தியா உருவாக்குவதற்கான தொலைநோக்கு பார்வையை எடுத்துரைக்கிறது. நமது டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்தும். உலகளாவிய தொழில்நுட்பத்தில் இந்தியா சிறந்து விளங்க உதவியாக இருக்கும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us