/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/திருவள்ளூர், திருமழிசையில் மக்களுடன் முதல்வர் முகாம்திருவள்ளூர், திருமழிசையில் மக்களுடன் முதல்வர் முகாம்
திருவள்ளூர், திருமழிசையில் மக்களுடன் முதல்வர் முகாம்
திருவள்ளூர், திருமழிசையில் மக்களுடன் முதல்வர் முகாம்
திருவள்ளூர், திருமழிசையில் மக்களுடன் முதல்வர் முகாம்
ADDED : ஜன 11, 2024 11:14 PM
திருவள்ளூர்:திருமழிசை பேரூராட்சியில் உள்ள எம்.எஸ்.எஸ். திருமண மண்டபத்தில் 'மக்களுடன் முதல்வர்' நிகழ்ச்சி, செயல் அலுவலர் வெங்கடேசன், பூந்தமல்லி தாசில்தார் மாலினி முன்னிலையில் பேரூராட்சிகள் இயக்குனர் ஜெயக்குமார் தலைமையில் நடந்தது. பேரூராட்சி தலைவர் வடிவேல் வரவேற்றார்.
இதில் வருவாய், மின்சாரம், சுகாதாரம் உள்ளிட்ட, 16 துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர். பூந்தமல்லி எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். பேரூராட்சிக்கு உட்பட்ட, 15 வார்டுகளில் இருந்து, 722 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் துறை வாரியாக பிரித்து வழங்கப்பட்டது.
இதேபோல் திருவள்ளூர் டி.ஆர்.எஸ். மஹாலில் நகராட்சி கமிஷனர் சுபாஷினி தலைமையில் நடந்த 'மக்களுடன் முதல்வர் ' முகாமில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் எம்.எல்.ஏ., வி.ஜி. ராஜேந்திரன் பங்கேற்று மனுக்களை பெற்றார். இந்த முகாமில் 194 மனுக்கள் பெறப்பட்டன. நான்கு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதமுள்ள மனு துறை வாரியாக பிரித்து வழங்கப்பட்டது.