நில அளவீடு செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது
நில அளவீடு செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது
நில அளவீடு செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது
ADDED : செப் 17, 2025 08:34 PM

ஆத்தூர்: நிலம் அளவீடு செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் சர்வேயர், அவரது உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே துலுக்கனூர் பகுதியை சேர்ந்தவர் குமரேசன்( விவசாயி). இவர், தனது நிலத்தை அளவீடு செய்து, தனி பட்டா பெறுவதற்காக விண்ணப்பித்தார். அதற்கு, ஆத்தூர் தாலுகா சர்வேயர் ஜீவிதா(29), அவரது உதவியாளர் கண்ணதாசன்(37) ஆகியோர், 12 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர்.அதன் பின் ரூ.10 ஆயிரம் லஞ்சம் தரும்படி பேரம் பேசியுள்ளனர். லஞ்சம் கொடுக்க விரும்பாத குமரேசன், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
அவர்கள் ஆலோசனைப்படி, இன்று (செப்.,17) மாலை 5 மணியளவில் ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் ஜீவிதா மற்றும் கண்ணதாசன் ஆகியோரிடம் குமரேசன் ரூ. 10 ஆயிரம் லஞ்ச பணத்தை கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்து இருந்த சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இருவரையும் கையும் களவுமாக பிடித்து,கைது செய்தனர்.