Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/'ஹிந்துக்கள் பிரச்னைகளை கண்டுகொள்ளாத தமிழக அரசு'

'ஹிந்துக்கள் பிரச்னைகளை கண்டுகொள்ளாத தமிழக அரசு'

'ஹிந்துக்கள் பிரச்னைகளை கண்டுகொள்ளாத தமிழக அரசு'

'ஹிந்துக்கள் பிரச்னைகளை கண்டுகொள்ளாத தமிழக அரசு'

ADDED : ஜன 12, 2024 12:35 AM


Google News
திருப்பூர்;'தமிழக அரசு பெரும்பான்மை ஹிந்துக்களின் பல பிரச்னைகளை கண்டு கொள்வதே இல்லை,' என்று, ஹிந்து முன்னணி குற்றம்சாட்டியுள்ளது.

இதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:

சென்னை தலைமை செயலகத்தில் சிறுபான்மையினர் நலன் குறித்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், கிறிஸ்துவ தேவாலய தலைவர்கள், இஸ்லாமிய மதபோதகர்களுடனும் தனியாக ஆலோசனை நடத்தி, சிறுபான்மையினருக்காக பல நல திட்டங்களை வெளியிட்டுள்ளார்.

மதசார்பற்ற அரசியல் செய்வதாக கூறி கொள்ளும் முதல்வர், ஹிந்துக்களின் சுடுகாடுகள் பராமரிப்பின்றி கிடக்கின்றன என்பது பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை. பலவற்றில் அடிப்படை வசதிகளே இல்லை. சென்னை மற்றும் பிற முக்கிய மாவட்டங்களில் ஹிந்துக்களின் சடலங்களை எரிப்பதோடு சரி, புதைப்பதற்கு அரசாங்க நிர்வாகம் அனுமதிப்பதில்லை.

சென்னை, கோவை, திருப்பூர், சேலம் உட்பட அனைத்து மாநகராட்சி பகுதிகளிலும் உள்ள ஹிந்து சுடுகாட்டு இடத்தில் இடித்து நவீன கழிப்பிடங்கள் கட்டப்படுகின்றன.

இஸ்லாமியர், கிறிஸ்துவர்களின் கல்லறை தோட்டங்களுக்கும், கபர்ஸ்தானங்களுக்கும் சலுகைகளை வாரி வழங்குவது எந்த விதத்தில் நியாயம் என்பது கேள்வியாக உள்ளது.

சிவபெருமான் ருத்ர தாண்டவமாடும் மயான பூமியில் அ.தி.மு.க., - தி.மு.க., போன்ற கட்சிகள் மாறி, மாறி ஊழல் தாண்டவம் ஆடி வருகின்றன. தமிழகத்தில் பல விவசாய நிலங்கள் கல்லறை தோட்டங்களாக மாறி இருப்பது கவலைக்குரியது.

கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுதலங்கள், கல்லறை தோட்டங்கள், கபர்ஸ்தானங்கள் என, சிறுபான்மையினருக்காக தங்கள் மூளையையும், பணத்தையும் செலவிடும் தி.மு.க., அரசு, பெரும்பான்மை ஹிந்து சமுதாயத்தை பற்றியும், கொஞ்சம் கவலைப்பட வேண்டும்.

இனி உங்களின் வாக்கு வங்கி அரசியல் எடுபடாது. துாங்கிய ஹிந்துக்கள் விழித்து விட்டனர். ஒட்டுமொத்த ஹிந்து சமுதாயமும் கேள்வி கேட்கும் காலம் வந்து விட்டது. இனியாவது, தி.மு.க., - அ.தி.மு.க., போன்ற கட்சிகள் ஹிந்துக்களின் நலனில் அக்கறையோடு செயல்பட வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us