ADDED : ஜன 12, 2024 03:42 AM

புதுச்சேரி: புதுப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் பரிசளிப்பு விழா நடந்தது.
புதுச்சேரி புதுப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் பரிசளிப்பு விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சாந்திகுமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் பழனிபாலையா பங்கேற்று, எல்.கே.,ஜி., முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் எழுது பொருட்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில், பள்ளியில் ஓய்வு பெற்ற துணை முதல்வர்ஆல்பர்ட் டொமினிக் ராயர், ஸ்டேட் பேங்க் மேலாளர் ராஜ்குமார், ஓய்வு பெற்ற பள்ளி பேராசிரியர்கள் சத்தியமூர்த்தி, ராமமூர்த்தி, பழனி உட்பட பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.