/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/தெருவிளக்கு வசதி இல்லாத காவயல் குடியிருப்பு பகுதிதெருவிளக்கு வசதி இல்லாத காவயல் குடியிருப்பு பகுதி
தெருவிளக்கு வசதி இல்லாத காவயல் குடியிருப்பு பகுதி
தெருவிளக்கு வசதி இல்லாத காவயல் குடியிருப்பு பகுதி
தெருவிளக்கு வசதி இல்லாத காவயல் குடியிருப்பு பகுதி
ADDED : ஜன 11, 2024 09:57 PM
பந்தலுார்;சேரங்கோடு ஊராட்சி காவயல் டான்டீ குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது.
இங்கு இரவில் மட்டுமின்றி பகல் நேரங்களிலும் யானை சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது. குடியிருப்புகளை ஒட்டி சிறு குளங்கள் உள்ளதால், இரவு நேரங்களில் தண்ணீர் குடிக்க அதிக அளவில் வனவிலங்குகள் இங்கு வந்து செல்கின்றன.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பகுதியில் பகல் நேரத்தில் நடந்து வந்த தந்தை மகன் ஆகியோர், யானை தாக்கி ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. இங்குள்ள தெரு விளக்குகள் அனைத்தும் பழுதடைந்து, பல மாதங்கள் கடந்தும் அதனை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் முன் வரவில்லை.
இதனால் இரவு நேரங்களில் மக்கள் வெளியே வருவதற்கு அச்சப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.
எனவே, ஊராட்சி நிர்வாகம் இப்பகுதியில் பழுதடைந்த தெரு விளக்குகளை மாற்றி, கூடுதலாக விளக்குகளை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.