/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/சிறுத்தை நடமாட்டம் ;பொய்யான தகவல்: எஸ்.பி.,சிறுத்தை நடமாட்டம் ;பொய்யான தகவல்: எஸ்.பி.,
சிறுத்தை நடமாட்டம் ;பொய்யான தகவல்: எஸ்.பி.,
சிறுத்தை நடமாட்டம் ;பொய்யான தகவல்: எஸ்.பி.,
சிறுத்தை நடமாட்டம் ;பொய்யான தகவல்: எஸ்.பி.,
ADDED : ஜன 11, 2024 09:54 PM
ஊட்டி;'சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொய்யான தகவல் பதிவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என, எஸ்.பி., எச்சரித்துள்ளார்.
எஸ்.பி. சுந்தரவடிவேல் அறிக்கை: தேவாலா பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் சிறுத்தை தாக்கி மூன்று வயது குழந்தை உயிரிழந்தார். நான்கு வயது சிறுமி காயம் அடைந்துள்ளார். பல இடங்களில் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். வனத்துறையினர் அந்த சிறுத்தையை பிடித்து விட்டனர்.
எனினும், மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் சிலர் பொய்யான தகவல்களை பரப்பி வருவது தெரியவந்துள்ளது. இது இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 'பொய்யான தகவல்களை பதிவிட கூடாது,' என, ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இனி அவ்வாறு பொய்யான தகவல் பதிவிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.