Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/கனமழை மற்றும் நிலச்சரிவால் சிக்கிமில் 1,200 பயணிகள் தவிப்பு: மீட்பு நடவடிக்கையில் தொய்வு

கனமழை மற்றும் நிலச்சரிவால் சிக்கிமில் 1,200 பயணிகள் தவிப்பு: மீட்பு நடவடிக்கையில் தொய்வு

கனமழை மற்றும் நிலச்சரிவால் சிக்கிமில் 1,200 பயணிகள் தவிப்பு: மீட்பு நடவடிக்கையில் தொய்வு

கனமழை மற்றும் நிலச்சரிவால் சிக்கிமில் 1,200 பயணிகள் தவிப்பு: மீட்பு நடவடிக்கையில் தொய்வு

ADDED : ஜூன் 01, 2025 09:58 PM


Google News
Latest Tamil News
காங்டாக்: வடக்கு சிக்கிமில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவால், 1200 சுற்றுலாப் பயணிகள் சிக்கி தவித்து வருகின்றனர். அந்த பகுதிகளில் நிலச்சரிவு காரணமாக மீட்பு நடவடிக்கைகள் ஸ்தம்பித்துள்ளன.

சிக்கிம் மாநிலத்தில் பெய்துவரும் கனமழை மற்றும் நிலச்சரிவால் மங்கன் மாவட்டத்தில் அமைந்துள்ள லாச்சென் மற்றும் லாச்சுங்கின் தொலைதுாரப்பகுதிகளில், 1,200க்கும் மேற்பட்ட உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும், இரண்டு வெளிநாட்டினரும் சிக்கி தவித்து வருகின்றனர்.இங்கு ஏற்பட்டுள்ள பால சேதம் மற்றும் டீஸ்டா நதியில் நீர் மட்டம் உயர்ந்து வருவது உள்ளிட்ட காரணங்களால், அவர்களை வெளியேற்றும் முயற்சிகள் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக மங்கன் காவல் கண்காணிப்பாளர் சோனம் டெட்சு பூட்டியா கூறியதாவது:

இன்று முதல் மீட்பு மற்றும் வெளியேற்ற நடவடிக்கைகள் தொடங்க திட்டமிட்டிருந்தோம்., ஆனால் ஷிப்கியரில் ஏற்பட்ட நிலச்சரிவு அதை சாத்தியமற்றதாக்கியது. சாலை இணைப்பு இன்னும் தடைபட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு பனிப்பாறை ஏரி வெடிப்பு வெள்ளத்திற்குப் பிறகு அவசரமாக மீண்டும் கட்டப்பட்ட பிடாங் பெய்லி பாலம் சேதமடைந்ததால் நிலைமை மோசமடைந்துள்ளது. டீஸ்டாவின் உயரும் நீர் பாலத்தின் அடித்தளத்தை பலவீனப்படுத்தியுள்ளது, இது சோங்கு தொகுதியை மேலும் தனிமைப்படுத்தியுள்ளது மற்றும் போக்குவரத்தை இன்னும் கடினமாக்கியுள்ளது.

வானிலை மற்றும் பாதுகாப்பு நிலைமைகளைப் பொறுத்து நாளை வெளியேற்றம் தொடங்கும் என்று நாங்கள் நம்புகிறோம், உள்ளூர் அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறார்கள்.

இவ்வாறு பூட்டியா சோனம் டெட்சு கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us