/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை: பக்தர்கள் பரவசம்ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை: பக்தர்கள் பரவசம்
ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை: பக்தர்கள் பரவசம்
ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை: பக்தர்கள் பரவசம்
ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை: பக்தர்கள் பரவசம்
ADDED : ஜன 11, 2024 11:04 PM

ஊட்டி;அனுமன் ஜெயந்தியை ஒட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது.
அஞ்சனையின் மைந்தனாக போற்றப்படும் அனுமன் பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. மார்கழி மாத அமாவாசையில் மூல நட்சத்திரம் சேர்ந்து இருக்கும் நாளில் அனுமன் பிறந்தார் என்பது சிறப்பு அம்சமாகும்.
'அனுமன் ஜெயந்தி அன்று அனுமனை வழிபட்டால் சிவனையும், பெருமாளையும் வணங்கிய புண்ணியம் கிடைக்கும்; இதுவரை சந்தித்த துன்பங்கள் நீங்கி நன்மை நடக்கும்,' என்பது ஐதீகம்.
அனுமன் ஜெயந்தி தினமான நேற்று, ஊட்டி மார்க்கெட் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டது.
காலை, 7:30 மணி முதல் சிறப்பு பூஜைகள் நடந்தது. அங்கு ஆஞ்சநேயர் ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பெண்கள் அகல் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.
மதியம், 3:00 மணிக்கு தேரோட்டம் நடந்தது, ஏற்பாடுகளை செயல் அலுவலர் ராஜேஷ் மணிகண்டன், ஆய்வாளர் ஹேமலதா, தக்கார் ஜெகநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.
இதே போல், புதுமந்து, வேலிவியூ பகுதிகளில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் வடைமாலை உட்பட பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு அனுமன் அருள் பாலித்தார். ஆஞ்சநேயருக்கு பால், மஞ்சள், விபூதி, சந்தனம் உட்பட, 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
* மஞ்சூர் அருகே அன்னமலை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் அமாவாசையை ஒட்டி அர்ச்சகர் குரு கிருஷ்ணாநந்தாஜி தலைமையில் சிறப்பு பூஜை, அன்னதான நிகழ்ச்சி நடந்தது.