/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/மூன்று மாதத்திற்கு ஒரு முறை ரூ.15 லட்சம் செலவழிக்கும் கடலாடி யூனியன் நிர்வாகம்மூன்று மாதத்திற்கு ஒரு முறை ரூ.15 லட்சம் செலவழிக்கும் கடலாடி யூனியன் நிர்வாகம்
மூன்று மாதத்திற்கு ஒரு முறை ரூ.15 லட்சம் செலவழிக்கும் கடலாடி யூனியன் நிர்வாகம்
மூன்று மாதத்திற்கு ஒரு முறை ரூ.15 லட்சம் செலவழிக்கும் கடலாடி யூனியன் நிர்வாகம்
மூன்று மாதத்திற்கு ஒரு முறை ரூ.15 லட்சம் செலவழிக்கும் கடலாடி யூனியன் நிர்வாகம்
ADDED : ஜன 12, 2024 12:12 AM
சாயல்குடி : -சுகாதாரப்பணிகளுக்காக மூன்று மாதத்திற்கு ஒரு முறை ரூ.15 லட்சம் செலவழிக்கும் கடலாடி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் முறையாக காய்ச்சல் தடுப்புமுகாம்கள்நடத்த வேண்டும் என்று துணைத்தலைவர் ஆத்தி கூறினார்.
கடலாடி ஊராட்சி ஒன்றியத்தில் 60 கிராம ஊராட்சிகள் உள்ளன.
பருவமழை காலத்தில் மழை நீருடன் கழிவு நீர் தேங்கி இருக்கும் இடங்கள், தண்ணீர் வெளியேற வழி இல்லாத இடங்களை கண்டறிந்து அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.
கிராமங்களில் உள்ள தெருக்கள் வீடுகள் தோறும் சுகாதாரப் பணிகளை செய்வதற்கும் மாவட்டத்தில்உள்ள 11 ஒன்றியங்களிலும் இதற்கான தொகை விடுவிக்கப்படுகிறது. ஆனால் முறையாக பணிகளைச் செய்யாததால் பல்வேறு இடங்களில் காய்ச்சல் பரவுவதாக புகார் எழுந்துள்ளது.
கடலாடி ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் ஆத்தி கூறியதாவது:
கடலாடி ஒன்றியத்தில் 60 ஊராட்சிகளில் உள்ள கிணறுகளில் அபேட் என்ற மருந்து தெளித்தல், ப்ளீச்சிங் பவுடர், குளோரினேசன் செய்யப்பட்ட குடிநீர் வழங்குதல், கொசு ஒழிப்பு புகை மருந்து அடித்தல், தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் டெங்கு கொசு புழுக்களின் லார்வா உற்பத்தியை கண்டறிந்து அவற்றை அழித்தல் உள்ளிட்ட பணிகள் செய்யப்படுகிறது.
இதற்காக 40 மஸ்துார் பணியாளர்கள் கடலாடி ஒன்றியத்தில் சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்காக கடலாடி ஒன்றியக் குழு கூட்டத்தில்மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரூ.15 லட்சம் ஊதியமாகவும், இதர செலவுகளுக்காகவும் விடுவிக்கப்படுகிறது.
டெங்கு, வைரஸ் காய்ச்சல் பாதிப்பில் இருந்து மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மருத்துவ வசதிகளை முன்னெடுப்பதற்கும் முறையான நடவடிக்கை இல்லாததால் வேகமாக வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது.
எனவே ஒவ்வொரு ஊராட்சி நிர்வாகத்துடன்இணைந்து சுகாதார விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். அரசு நிதியை வீணடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றார்.