/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சின்மயா மிஷன் சொற்பொழிவு 16ம் தேதி வரை நடக்கிறதுசின்மயா மிஷன் சொற்பொழிவு 16ம் தேதி வரை நடக்கிறது
சின்மயா மிஷன் சொற்பொழிவு 16ம் தேதி வரை நடக்கிறது
சின்மயா மிஷன் சொற்பொழிவு 16ம் தேதி வரை நடக்கிறது
சின்மயா மிஷன் சொற்பொழிவு 16ம் தேதி வரை நடக்கிறது
ADDED : ஜூலை 13, 2011 01:29 AM
புதுச்சேரி : சின்மயா மிஷன் சார்பில் சற்குரு ஓட்டலில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.
புதுச்சேரி சின்மயா மிஷன் சார்பில் ஸ்ரீமத் பகவத் கீதையின் மகத்துவத்தை போற்றும் வகையில் 'வெற்றிக்கான சிறப்பு மந்திரங்கள்' என்ற தலைப் பில் ஆன்மிக சொற்பொழிவு 16ம் தேதி வரை (மாலை 6.45 மணி முதல் 8.15 மணி வரை) நடக்கிறது. நிகழ்ச்சியை சற்குரு ஓட்டலில் இன்டெகரா மேலாண் இயக்குனர் ஸ்ரீராம் சுப்ரமண்யா, சற்குரு ஓட்டல் மேலாண் இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் துவக்கி வைத்தனர். கோயம்பத்தூர் சின்மயா மிஷன் ஆச்சார்யா விமலானந்தா பேசினார். ஸ்ரீமத் பகவத் கீதையிலிருந்து சில முக்கிய ஸ்லோகங்களை தேர்ந்தெடுத்து, அவற்றை பின்பற்றினால் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் மேன்மைகள் குறித்து விளக்கினார். நிகழ்ச்சியை முன்னிட்டு லாஸ்பேட் கிருஷ்ணா நகர் மெயின் ரோடு 17வது குறுக்குத் தெருவில் உள்ள சின்மயா சூர்யாவனில் நேற்று முன்தினம் முதல் 16ம் தேதி வரை (காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை) 5 நாள் தியான பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தியானத்திற்கான விதிமுறைகள், உருவ அருவ தியானம், மனதை ஒருமுகப்படுத்துதல் போன்றவை குறித்த விளக்கங்கள் தெளி வுபடுத்தப்படுகிறது.