/உள்ளூர் செய்திகள்/கரூர்/அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி மனைவி வீட்டில் ஆய்வுஅமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி மனைவி வீட்டில் ஆய்வு
அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி மனைவி வீட்டில் ஆய்வு
அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி மனைவி வீட்டில் ஆய்வு
அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி மனைவி வீட்டில் ஆய்வு
ADDED : ஜன 12, 2024 01:13 PM
கரூர்; அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி மனைவி பெயரில் கட்டப்பட்டு வரும் வீட்டில், வருமான வரித்துறை சொத்து மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு செய்தனர்.
சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தில், அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்தாண்டு ஜூன், 14ல் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அதே நாளில் கரூரில் உள்ள, அமைச்சரின் தம்பி அசோக்குமார் வீடு, அலுவலகம் மற்றும் ராம் நகரில் அசோக்குமார் மனைவி நிர்மலா பெயரில் கட்டப்பட்டு வரும் வீட்டிலும் சோதனை நடந்தது.
இந்நிலையில் நிர்மலா பெயரில் கட்டப்பட்டு வரும் வீட்டில், வருமான வரித்துறை சொத்து மதிப்பீட்டு குழுவினர், எட்டு பேர் நேற்று ஆய்வுக்கு வந்தனர். வீட்டின் மொத்த சதுர அடி, வீட்டில் பயன்படுத்தப்படும் கட்டுமான பொருட்கள் குறித்து ஆய்வில் ஈடுபட்டனர். காலை, ௮:௦௦ மணிக்கு தொடங்கிய ஆய்வு, 11:00 மணிக்கு முடிந்தது.
அசோக்குமாரின் நெருங்கிய நண்பரான சுப்பிரமணியத்தின் கொங்கு மெஸ் நிறுவனம், வெள்ளியணை வால்காட்டுபுதுாரில் உள்ள பண்ணை வீட்டில், வருமான வரித்துறை சொத்து மதிப்பீட்டு குழுவினர், நேற்று முன்தினம் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.