ADDED : ஜன 12, 2024 06:51 AM
மஞ்சள் பை விழிப்புணர்வு
மதுரை: வேடர்புளியங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாசுக் கட்டுப்பாடு வாரியம் சார்பில் போகி விழிப்புணர்வு, மஞ்சள் பை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தலைமையாசிரியர் தென்கரை முத்துப்பிள்ளை தலைமையில் நடந்தது.
வாரிய மண்டல பொறியாளர் குணசேகரன், உதவி பொறியாளர்கள் உஷாராணி, தேவகிருபை, சிவசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பொங்கல் பரிசாக மஞ்சள் பை, இனிப்பு வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் ரமேஷ் கண்ணன், நித்யா, மாரிமுத்து ஏற்பாடு செய்தனர். ஆசிரியை இந்துமதி நன்றி கூறினார்.
மாணவர்களுக்கு
வளாகத்தேர்வு
மதுரை: கே.எல்.என்., நினைவு பாலிடெக்னிக் கல்லுாரியில் பெங்களூரு சென்டம் எலகட்ரானிக்ஸ் சார்பில் வளாகத்தேர்வு நடந்தது. எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் பிரிவை சேர்ந்த 2024 பேட்ச் மாணவர்கள் பங்கேற்றனர்.
நிறுவன அதிகாரிகள் அம்சித், சுமி தேர்வு நடத்தினர். பல்வேறு பாலிடெக்னிக் கல்லுாரிகளை சேர்ந்த 170 பேர் பங்கேற்றனர். 86 பேர் தேர்வு செய்யப்பட்டனர். நிகழ்ச்சிக்கு செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். முதல்வர் ஆனந்தன் வரவேற்றார். துணை முதல்வர் சகாதேவன், துறைத் தலைவர்கள் ஆதிராஜன், ஜெயலட்சுமி, பிரேம்குமார் ஏற்பாடு செய்தனர்.
பயிற்சி பட்டறை
மதுரை: சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரியில் நுாலகம் சார்பில் தகவல் தொடர்பு திறன் பயனுள்ள முறைகள் மற்றும் தகவல் தொடர்புத் தடைகள் குறித்த பயிற்சி பட்டறை நடந்தது.
விரிவுரையாளர் பூம்பாவை வரவேற்றார். கல்லுாரி துணைத் தலைவர் குழந்தைவேல், முதல்வர் (பொறுப்பு) கவிதா, பாலுாஸ் அகாடமி நிறுவனர் பாலசுந்தர் உள்ளிட்டோர் பேசினர். 100க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். வணிகவியல் துறைத் தலைவி தேன்மொழி நன்றி கூறினார்.
முப்பெரும் விழா
மதுரை: கிழக்கு ஒன்றியம் எல்.கே.பி., நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் புகையில்லா போகி, மஞ்சப்பை விழிப்புணர்வு, பனங்கிழங்கு அறுவடைசெய்தல் ஆகிய முப்பெரும் விழா தலைமைாசிரியர் தென்னவன் தலைமையில் நடந்தது. ஆசிரியர் ராஜவடிவேல் முன்னிலை வகித்தார்.
ஆசிரியை அருவகம் வரவேற்றார். மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் குணசேகரன், உதவி பொறியாளர் உஷாராணி ஆகியோர் புகையில்லா போகி மஞ்சப்பை அவசியம் குறித்தும், தடை செய்யப்பட்ட 14 வகை பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த கூடாது என அறிவுறுத்தினர். சமூக ஆர்வலர் அசோக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆசிரியர்கள் அனுசியா, மனோன்மணி, சித்ரா, தமிழ்ச்செல்வி, அகிலா, அம்பிகா, சுகுமாறன் ஏற்பாடு செய்தனர். ஆசிரியை விஜயலட்சுமி நன்றி கூறினார்.
சொற்பொழிவு
திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி முதுகலை இயற்பியல் ஆராய்ச்சி மையம் சார்பில் சுற்றுச்சூழலில் நானோ பொருட்களின் பயன்பாடுகள் என்ற தலைப்பில் சாத்துார் ராமசாமி நாயுடு நினைவு கல்லுாரி பேராசிரியர் சுந்தர வெங்கடேஷ் பேசினார். மாணவி சிவசுதர்ஷனா வரவேற்றார்.
கல்லுாரி தலைவர் ராஜகோபால், செயலாளர் விஜயராகவன், முதல்வர் ராமசுப்பையா, சுயநிதிப்பிரிவு இயக்குநர் பிரபு கலந்து கொண்டனர். பேராசிரியர் கண்ணன் அறிமுக உரையாற்றினார். இயற்பியல் துறைத்தலைவர் கவிதா ஒருங்கிணைத்தார். மாணவி நாகசூர்யா கூறினார்.
-கோதை காட்டும் பாதை
அழகர்கோவில்: எம்.ஏ.வி.எம்.எம். ஆயிர வைசியர் கலை அறிவியல் கல்லுாரியில் 'கோதை காட்டும் பாதை' சொற்பொழிவு துணை முதல்வர் அசோக் தலைமையில் நடந்தது. பேராசிரியர் சிவகாமி வைதேகி வரவேற்றார் பேராசிரியர் ஜெகன்நாத் திருப்பாவை 4 வது பாசுரத்தில் 'ழ' கரம் பலமுறை உள்ளது. 5வது பாசுரத்தில் கோதையின் விரத முறைகள், 21வது பாசுரத்தில் கோதையின் கவித்திறமை, தமிழில் எடுத்துரைக்கும் விதம், அவர் காட்டிய பாதை பற்றி விளக்கினார். ஸ்ரீ பூ கலாசார மையம் செயலாளர் ராமகிருஷ்ணன் சிலம்பாறு, அதன் சித்திரை திருவிழா தொடர்பு பற்றி பேசினார். தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் செல்வக்குமார் பாண்டி நன்றி கூறினார்.
பொங்கல் விழா
சோழவந்தான்: திருவேடகம் விவேகானந்த கல்லுாரியில் துறைவாரியாக மாணவர்கள் பொங்கல் விழா கொண்டாடினர். கல்லுாரி செயலர் சுவாமி வேதானந்த, குலபதி அத்யாத்மனந்த, முதல்வர் வெங்கடேசன், துணை முதல்வர் கார்த்திகேயன், முதன்மையர் ஜெயசங்கர், அகத்தர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் சதீஷ் பாபு முன்னிலை வகித்தனர். மாணவர்கள் குழுவாக மல்லர் கம்பம், கராத்தே, சிலம்பம், யோகா, தப்பாட்டம், தேவராட்டம், உடற்பயிற்சி நிகழ்வுகளை செய்து காட்டினர். வரலாற்று துறை உதவிப் பேராசிரியர் முருகன், விளையாட்டுத்துறை இயக்குனர் நிரேந்தன், விவேகா நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் அருள்மாறன், குருகுல ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரசேகரன், எல்லைராஜா, காமாட்சி பிரேமானந்தம் ஒருங்கிணைத்தனர்.
துாய்மைப்பணிகள்
பாலமேடு: வலையபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பல்வேறு துாய்மை பணிகள் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர், தொடக்க கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர்கள் ஆலோசனையின்பேரில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டத்தின் கீழ் இப்பணிகள் நடந்தன.
பள்ளி வளாகம், வகுப்பறை, மேல்தள துாய்மை போன்ற பணிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள் இணைந்து ஈடுபட்டனர். பள்ளி மேலாண்மைக் குழு முயற்சியில் ரூ.2 லட்சத்தில் கட்டப்பட்ட நவீன கழிப்பறை மற்றும் சுற்றுச் சுவரை ஊராட்சி தலைவி காயத்ரி திறந்து வைத்தார். பள்ளியில் காய்கறி தோட்டம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஏற்பாடுகளை தலைமை ஆசிரியை ஞானசேகரன், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.