பண மோசடி வழக்கு: ஜார்க்கண்ட் அமைச்சர் ராஜினாமா
பண மோசடி வழக்கு: ஜார்க்கண்ட் அமைச்சர் ராஜினாமா
பண மோசடி வழக்கு: ஜார்க்கண்ட் அமைச்சர் ராஜினாமா
UPDATED : ஜூன் 11, 2024 07:56 PM
ADDED : ஜூன் 11, 2024 07:52 PM

ராஞ்சி:
பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சிறையில் உள்ள ஜார்க்கண்ட் காங்.,
அமைச்சர் ஆலம்கிர் ஆலம் அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.
ஜார்க்கண்ட்
மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்கதி மோர்ச்சா, காங்., கூட்டணி ஆட்சி
நடக்கிறது. முதல்வர் சம்பய் சோரன் உள்ளார். இவரது அமைச்சரவையில்
காங்.,கட்சியை சேர்ந்த ஆலம்கீர் ஆலம் அமைச்சராக உள்ளார்.
இவர் மீது ஊரக மேம்பாட்டு திட்டத்தில் ஊழல் செய்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இவரது வீடு, அலுவலகத்தில் நடந்த ரெய்டில், ரூ. 37 கோடி ரொக்கப்பணம்
சிக்கியது. கடந்த மே 15-ம் தேதி அமலாக்கத்துறை முன் ஆஜரானார். அப்போதே
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் காங்.,
மேலிடம் உத்தரவிட்டதையடுத்து தனது அமைச்சர் பதவியையும், சட்டசபை
காங்.,கட்சி தலைவர் பதவியையும் ராஜினாமா செய்தார்.