/உள்ளூர் செய்திகள்/மதுரை/ 25,000 ரூபாய் கடனுக்கு ரூ.15 லட்சம் கந்துவட்டி? 25,000 ரூபாய் கடனுக்கு ரூ.15 லட்சம் கந்துவட்டி?
25,000 ரூபாய் கடனுக்கு ரூ.15 லட்சம் கந்துவட்டி?
25,000 ரூபாய் கடனுக்கு ரூ.15 லட்சம் கந்துவட்டி?
25,000 ரூபாய் கடனுக்கு ரூ.15 லட்சம் கந்துவட்டி?
ADDED : ஜூன் 01, 2024 02:14 AM
தெப்பக்குளம் : மதுரை, யாகப்பா நகர் பாண்டியன், 45; மினி சரக்கு வேன் டிரைவர். தெப்பக்குளம் பகுதி ராமகிருஷ்ணனிடம், 2021ல், 25,000 ரூபாய் கடன் வாங்கி மாத தவணை செலுத்தி வந்தார். பின், தவணை செலுத்த கால தாமதம் ஆனதால், வட்டிக்கு மேல் வட்டி போட்டு, 15 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
அதிர்ச்சியடைந்த பாண்டியன், கடந்த மே 18ம் தேதி மனைவியின் 3 சவரன் செயினை அடகு வைத்து 35,000 ரூபாயை ராமகிருஷ்ணனிடம் தந்தார்.
'இத்தொகையை வட்டியில் கழித்துக்கொள்கிறேன். 15 லட்சம் ரூபாயை ஒரு மாதத்திற்குள் தர வேண்டும்' என அவர் மிரட்ட, பயந்து போன பாண்டியன் விஷம் குடித்தார். தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
ராமகிருஷ்ணன் மீது கந்துவட்டி சட்டத்தின் கீழ் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.