சிறுமி பலாத்கார வழக்கு டிரைவருக்கு ஆயுள் சிறை
சிறுமி பலாத்கார வழக்கு டிரைவருக்கு ஆயுள் சிறை
சிறுமி பலாத்கார வழக்கு டிரைவருக்கு ஆயுள் சிறை
ADDED : ஜன 12, 2024 12:35 AM

புதுச்சேரி:புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில், 14 வயது சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவரிடம் பெற்றோர் அழைத்து சென்றபோது, அவர் கர்ப்பமாக இருந்தது தெரிந்தது.
ரெட்டியார்பாளையம் போலீஸ் விசாரணையில், 2021 ஊரடங்கின்போது, வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் பேச்சு கொடுத்த டிரைவர் சதீஷ் பெரியான், 31, என்பவர் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தது தெரிந்தது.
இதையடுத்து, சதீஷ் பெரியானை ரெட்டியார்பாளையம் போலீசார், போக்சோ சட்டத்தில் கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
சிறுமி பலாத்கார வழக்கில் ஜாமின் பெற்றவர்; மற்றொரு போக்சோ வழக்கில் கைதாகி, 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நடந்த சிறுமி வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி சோபனா தேவி, சதீஷ் பெரியானுக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, அரசு சார்பில் 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.