அடிச்சு தூள் கிளப்பியது பருவமழை: வழக்கத்தை விட 59 சதவீதம் அதிகம்!
அடிச்சு தூள் கிளப்பியது பருவமழை: வழக்கத்தை விட 59 சதவீதம் அதிகம்!
அடிச்சு தூள் கிளப்பியது பருவமழை: வழக்கத்தை விட 59 சதவீதம் அதிகம்!
UPDATED : ஆக 06, 2024 12:14 PM
ADDED : ஆக 06, 2024 12:11 PM

சென்னை: தமிழகத்தில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட 59% கூடுதலாகப் பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த ஜூன் 1ம் தேதி முதல் இன்று (ஆகஸ்ட்6) வரை சராசரியாக 211 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. வழக்கத்தை விட 59% கூடுதலாகப் பெய்துள்ளது.
மாவட்டம் வாரியாக மழை விபரம் (மி.மீ.,)
* நீலகிரி 1003.9
* கோவை 748
* ராணிப்பேட்டை 429
* சென்னை 411.7
* திருவள்ளூர் 411.7
* காஞ்சிபுரம் 408.2
* செங்கல்பட்டு 337.4
* கன்னியாகுமரி 326.6
* வேலூர் 300.7
* திருவண்ணாமலை 262.2
11 மாவட்டங்களில் கனமழை கொட்டும்!
