/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/மாணவர்களுக்கு அடிப்படை திறன் பயிற்சிமாணவர்களுக்கு அடிப்படை திறன் பயிற்சி
மாணவர்களுக்கு அடிப்படை திறன் பயிற்சி
மாணவர்களுக்கு அடிப்படை திறன் பயிற்சி
மாணவர்களுக்கு அடிப்படை திறன் பயிற்சி
ADDED : ஜன 12, 2024 12:34 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்ட பள்ளிகளில் மாணவர்களுக்கு அடிப்படை திறன் பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.
மாவட்டத்தில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை அடிப்படை கல்வியான பிழையின்றி எழுதுதல், வாசித்தல், அடிப்படை கணிதம், அடிப்படை அறிவியலில் தடுமாறும் மாணவர்களுக்கு அடிப்படை திறன் பயிற்சி அளிக்கப்படுகின்றன. மாவட்டத்தில் இப்பயிற்சியை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பெறுவதாக பள்ளிக்கல்வித்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதே போல் நடந்து முடிந்த அரையாண்டு தேர்வில் 80 சதவீதத்திற்கு குறைவான தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமையாசியர்களுக்கு கலெக்டர் ஜெயசீலன், முதன்மை கல்வி அலுவலர் வளர்மதி தலைமையில் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் நடத்தப்படுகிறது.
கடந்த ஆண்டை போல் இந்தாண்டும் நல்ல தேர்ச்சி சதவீதம் பெற ஆசிரியர்களை உத்வேகப்படுத்த வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.