தினமும் ரூ.800க்கு விற்பனை; முதல்வர் மருந்தகம் அபாரம்
தினமும் ரூ.800க்கு விற்பனை; முதல்வர் மருந்தகம் அபாரம்
தினமும் ரூ.800க்கு விற்பனை; முதல்வர் மருந்தகம் அபாரம்

சென்னை:முதல்வர் மருந்தகத்தில் தினமும் சராசரியாக, 800 ரூபாய்க்கு மருந்து விற்பனை நடப்பதாக, கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, கூட்டுறவுத் துறை துணை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகம் முழுதும் உள்ள, 1,000 முதல்வர் மருந்தகங்களில் உயிர் காக்கும் ஜெனரிக் மருந்துகள், சந்தை விலையை காட்டிலும், 70 - 90 சதவீதம் குறைவான விலையில் விற்கப்படுகின்றன.
மருந்தகங்கள் துவங்கிய பிப்ரவரியில் தினமும் சராசரியாக, 300 ரூபாய்க்கு மருந்து விற்பனை இருந்த நிலையில், தற்போது, தினமும் சராசரியாக, 800 ரூபாய்க்கு மேல் விற்பனை நடக்கிறது.
இதுவரை, 6 கோடி ரூபாய் மதிப்பிலான ஜெனரிக் மருந்துகளும், 2 கோடி ரூபாய் மதிப்பிலான பிராண்டட் மருந்துகளும், முதல்வர் மருந்தகங்கள் வாயிலாக மிகக் குறைந்த விலையில் மக்களுக்கு விற்கப்பட்டுள்ளன.
முதல்வர் மருந்தகம் நடத்தும் தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு சங்க மருந்தாளுநர்களுக்கு லாபத்தில் பங்கு தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினங்களில் பணிபுரிவோருக்கு, 1,000 ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. எனவே, பாக்கெட் உணவு வகைகள் விற்கப்படவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.