ரூ. 98.70 லட்சம் மதிப்பீட்டில் சாலை
ரூ. 98.70 லட்சம் மதிப்பீட்டில் சாலை
ரூ. 98.70 லட்சம் மதிப்பீட்டில் சாலை
ADDED : ஜன 11, 2024 09:58 PM
ஊட்டி;ஊட்டி அதிகரட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட, முட்டிநாடு கிராமத்தில், 98.70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கான்கிரீட் சாலை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச் சந்திரன் பேசுகையில், ''அதிகரட்டி பேரூராட்சியில், இரண்டரை ஆண்டுகளில், 10.64 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதில், 98.70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கான்கிரீட் சாலை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைக்கப்பட்டது.
சமீபத்தில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், 6.64 லட்சம் கோடி ரூபாய்க்கு, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, 26.91 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் கட்டமைப்பு வசதியுடன், காலை உணவு திட்டம் கொண்டு வரப்பட்டதால், மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது,'' என்றார்.
டி.ஆர்.ஓ., கீர்த்தி பிரியதர்ஷினி, பேரூராட்சிகளின் உதவி பொறியாளர் மோகன்ராஜ், அதிகரட்டி பேரூராட்சி செயல் அலுவலர் நடராஜ், தலைவர் பேபிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.