/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ஸ்ரீசங்கரலிங்க ஆசிரமத்தில் புதுச்சேரி முதல்வர் தரிசனம்ஸ்ரீசங்கரலிங்க ஆசிரமத்தில் புதுச்சேரி முதல்வர் தரிசனம்
ஸ்ரீசங்கரலிங்க ஆசிரமத்தில் புதுச்சேரி முதல்வர் தரிசனம்
ஸ்ரீசங்கரலிங்க ஆசிரமத்தில் புதுச்சேரி முதல்வர் தரிசனம்
ஸ்ரீசங்கரலிங்க ஆசிரமத்தில் புதுச்சேரி முதல்வர் தரிசனம்
ADDED : ஜூலை 13, 2011 01:15 AM
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை ஸ்ரீசங்கரலிங்க சுவாமி ஆசிரமத்தில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சுவாமி தரிசனம் செய்தார்.
உளுந்தூர்பேட்டை ஸ்ரீசங்கரலிங்க சுவாமி ஆசி ரமத்தில் உலக அமைதி, நாட்டின் வளர்ச்சி, தனி மனிதன் முன்னேற்றம் வேண்டி 1008 திருவிளக்கு பூஜைகள் மற்றும் 14ம் ஆண்டு குரு பூஜை பெரு விழா நேற்று முன்தினம் நடந்தது. காலை 6.30 மணிக்கு விநாயகர் பூஜையும், 8.30 மணிக்கு கலச பூஜையும், 9 மணிக்கு மகா அபிஷேகமும், 12 மணிக்கு கலச அபிஷேகமும் நடந்தது. மாலை 4 மணிக்கு ஸ்ரீசங்கரலிங்க சுவாமி வீதியுலா, மாலை 6 மணிக்கு 1008 திருவிளக்கு பூஜையும் நடந்தது. திருவிளக்கு பூஜையை பாதூர் அகத்தீஸ்வரர் கோவில் பரம்பரை தர்மகர்த்தா அருணாசல குருக்கள் துவக்கி வைத்தார். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஸ்ரீசங்கரலிங்க சுவாமி ஆசிரமத்திற்கு வந்து சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் ஸ்ரீசங்கரலிங்க சுவாமிகள் பற்றிய புத்தகத்தை முதல்வர் ரங்கசாமி வெளியிட பேரூராட்சி தலைவர் ராதாகிருஷ்ணன் பெற்று கொண்டார்.