/உள்ளூர் செய்திகள்/சேலம்/ஏட்டை அடித்துக்கொன்றவர் ஓராண்டுக்கு பின் சிக்கினார்ஏட்டை அடித்துக்கொன்றவர் ஓராண்டுக்கு பின் சிக்கினார்
ஏட்டை அடித்துக்கொன்றவர் ஓராண்டுக்கு பின் சிக்கினார்
ஏட்டை அடித்துக்கொன்றவர் ஓராண்டுக்கு பின் சிக்கினார்
ஏட்டை அடித்துக்கொன்றவர் ஓராண்டுக்கு பின் சிக்கினார்
ADDED : ஜன 12, 2024 11:57 AM
காரிப்பட்டி; அயோத்தியாப்பட்டணம் அடுத்த மின்னாம்பள்ளியில், 2022ல் அடையாளம் தெரியாத மர்ம நபர் இறந்து கிடந்தார். காரிப்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்ததில், சேலம், மெய்யனுாரை சேர்ந்த ஜெயராமன், 55, என்பதும், சேலம் அரசு மருத்துவமனை ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிந்தவர் என்பதும் தெரிந்தது. காரிப்பட்டி போலீசார் சந்தேக மரண வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் ஓராண்டுக்கு பின், சங்ககிரி, அத்திமரப்பட்டியை சேர்ந்த, பட்டறை உரிமையாளர் விஜயகுமார், 52, என்பவரை நேற்று கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
விஜயகுமார், கொலை வழக்கு தொடர்பாக போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தபோது ஏட்டு ஜெயராமனுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கருமந்துறைக்கு, கள்ளச்சாராயம் குடிக்க சென்றுவிட்டு திரும்பியபோது, செல்லியம்பாளையத்தில் தகராறு ஏற்பட்டது. அதில் ஜெயராமனை, கல்லால் தாக்கி விட்டு விஜயகுமார் தப்பினார். படுகாயம் அடைந்த ஜெயராமன், சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.
ஓராண்டாக தலைமறைவாக இருந்த விஜயகுமார், கருமந்துறைக்கு மீண்டும் குடிக்க வந்தார். அப்போது வாழப்பாடி டி.எஸ்.பி., ஹரிசங்கரி தலைமையில் தனிப்படை போலீசார், விஜயகுமாரை கைது செய்தனனர். அவரிடம் மொபைல் போன், ஸ்பிளண்டர் பைக் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சந்தேக மரண வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.