/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/கடலோரங்களில் வளரும் மாங்குரோவ் முதன் முறையாக நிலத்தில் வளர்ப்புகடலோரங்களில் வளரும் மாங்குரோவ் முதன் முறையாக நிலத்தில் வளர்ப்பு
கடலோரங்களில் வளரும் மாங்குரோவ் முதன் முறையாக நிலத்தில் வளர்ப்பு
கடலோரங்களில் வளரும் மாங்குரோவ் முதன் முறையாக நிலத்தில் வளர்ப்பு
கடலோரங்களில் வளரும் மாங்குரோவ் முதன் முறையாக நிலத்தில் வளர்ப்பு
ADDED : ஜன 12, 2024 12:43 AM

ராமநாதபுரம்:கடலோரங்களில் மட்டும் வளர்க்கப்படும் மாங்ரோவ் மரக்கன்றுகள் முதன்முறையாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலத்தில் பனை ஓலை பைகளில் வளர்க்கப்படுகிறது.
கடலுார், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், துாத்துக்குடி ஆகிய மாவடங்களில் மாங்குரோவ் காடுகள் உள்ளன. ஈர நிலங்களின் அழிவு பேரழிவை ஏற்படுத்தும். சுனாமியின் சீற்றத்தை தடுத்ததில் மாங்குரோவ்(அலையாத்தி)காடுகள் முக்கிய பங்கு வகித்தன. கான்கீரிட் தடுப்பு சுவர்களை விட ஆயிரம் மடங்கு பலமானவை மாங்குரோவ் காடுகள். ஈர நிலங்களில் மாசு ஏற்படுத்தும் கார்பனை சேமித்து பகிர்ந்தளிப்பதில் சிறப்பாக பணிபுரிகின்றன. நத்தைகள், நண்டுகள், சிங்கி இறால், பால் சுறா, கடற்புல், ஆக்காட்டி குருவி, வெண் கொக்கு உள்ளிட்டவைகளின் உறைவிடமாகவும் மாங்குரோவ் காடுகள் உள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் வன உயிரின காப்பகம் சார்பில் தொண்டி, காரங்காடு, காந்திநகர், உப்பூர், ரெட்டை பாலம், முள்ளிமுனை, புதுப்பட்டினம், சம்பை, திருப்புல்லாணி, கொட்டாங்குடி பகுதிகளில் 555 எக்டேரில் மாங்ரோவ் காடுகள் உள்ளன.
* முதன் முறையாக நிலத்தில் வளர்ப்பு:
பொதுவாக மாங்ரோவ் நர்சரி கடலோரப்பகுதிகளில் மட்டுமே உள்ளது. இந்தாண்டு மாவட்ட வன உயிரின காப்பாளர் ஜக்தீஷ் சுதாகர் பகான் புது முயற்சியாக ராமநாதபுரம் வன அலுவலக வளாகத்தில் மாங்ரோவ் நர்சரி அமைத்துள்ளார். இங்கு 1000 செடிகள் வளர்க்கப்படுகின்றன. மண் வளத்தை பாதுகாக்கும் வகையில் முதன் முறையாக மகளிர் குழு தயாரித்த பனை ஓலை பையில் மாங்ரோவ் செடிகள் நன்றாக வளர்ந்துள்ளன. மேலும் 10 ஆயிரம் மாங்ரோவ் கன்றுகள் வளர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.