/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/கூடுதல் கட்டணம் வசூலித்தால் பஸ்கள் பறிமுதல்கூடுதல் கட்டணம் வசூலித்தால் பஸ்கள் பறிமுதல்
கூடுதல் கட்டணம் வசூலித்தால் பஸ்கள் பறிமுதல்
கூடுதல் கட்டணம் வசூலித்தால் பஸ்கள் பறிமுதல்
கூடுதல் கட்டணம் வசூலித்தால் பஸ்கள் பறிமுதல்
ADDED : ஜன 12, 2024 06:35 AM
திண்டுக்கல் : பொங்கல் பண்டிகை போது திண்டுக்கல் மாவட்டத்தில் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் பஸ்கள் பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொங்கல் பண்டிகை காலங்களில் மக்கள் வெளியூருக்கு குடும்பத்தோடு செல்கின்றனர். அரசு பஸ்களில் கூட்டமாக இருப்பதால் ஒருசிலர் தனியார் பஸ்களை நாடுகின்றனர். இதை ஒருசில பஸ் உரிமையாளர்கள் சாதகமாக பயன்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து நேற்று திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் சுரேஷ், ஆய்வாளர் இளங்கோ உள்ளிட்ட அதிகாரிகள் ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினர். பொங்கல் பண்டிகை போது வெளி மாவட்டங்களுக்கு ஆம்னி பஸ்களில் செல்லும் மக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது.
கூடுதல் கட்டணம் வசூலிப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அபராதம் வசூலிப்பதோடு பஸ்களும் பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.மேலும் இது தொடர்பாக மக்கள் 93848 08425 ல் புகார் தெரிவிக்கலாம்.