ADDED : ஜன 12, 2024 12:36 AM
சிவகாசி : சிவகாசி ஏ.ஏ.ஏ., பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரியில் அனைத்து துறை மாணவர்களுக்கான இரு நாட்கள் சர்வதேச தொழில்நுட்ப மாநாடு நடந்தது. பேராசிரியர் விவேக் வரவேற்றார்.
முதல்வர் சேகர் தலைமை வகித்தார். கானா குடியரசு, கே.ஏ.ஏ.எப்., பல்கலைக்கழக கல்லுாரி பேராசிரியர் முனைவர் சுபாஷ் தானப்பன் பேசியதாவது, சுற்றுச்சூழல் மாசடைவதனால் காற்று, தண்ணீர் மாசடைகிறது, பருவநிலை மாற்றங்கள் நடக்கிறது, மண் அரிப்பு ஏற்படுகிறது. மாணவர்கள் அனைவரும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தொழில்நுட்ப மாநாட்டில், 200 க்கும் அதிகமான பல்துறை ஆராய்ச்சிகள் நேரடியாகவும், இணையதளம் வழியாகவும் விளக்கப்பட்டன. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் ஹேமலதா, கிருஷ்ணப்ரியா செய்தனர்.