Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/டாஸ்மாக் கடைகள் 3 நாட்களுக்கு 'லீவ்'

டாஸ்மாக் கடைகள் 3 நாட்களுக்கு 'லீவ்'

டாஸ்மாக் கடைகள் 3 நாட்களுக்கு 'லீவ்'

டாஸ்மாக் கடைகள் 3 நாட்களுக்கு 'லீவ்'

ADDED : ஜன 12, 2024 12:05 AM


Google News
விழுப்புரம்: திருவள்ளுவர் தினம், ராமலிங்கர் நினைவு நாள் மற்றும் குடியரசு தினத்தையொட்டி மாவட்டத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள், மதுபான கூடங்கள், தனியார் பார்கள் இயங்காது என கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மதுபான சில்லறை வணிக விதிகளின் கீழ் , திருவள்ளுவர் தினத்தையொட்டி, வரும் 16ம் தேதியும்; ராமலிங்கர் நினைவு நாள் வரும் 25ம் தேதியும்; 26ம் தேதி குடியரசு தினமும் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் கடைகள், மதுபான கூடங்கள் மற்றும் தனியார் பார்கள் 3 நாட்கள் இயங்காது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us