ADDED : ஜன 11, 2024 11:15 PM
திருப்பூர்;தமிழகம், பிற மாநிலங்கள் மற்றும் உலக நாடுகளில் உள்ள தமிழ் சங்கங்கள் மற்றும் தமிழ் நிறுவனங்களில் புகழ் பெற்ற முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ற அயலகத் தமிழர் தின விழா சென்னையில் நடந்தது.
இதனை பொதுமக்கள் காணும் வகையில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதிநவீன மின்னணு வாகனத்தின் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதை திருப்பூர் மாநகராட்சி, மத்திய பஸ் ஸ்டாண்ட், சிக்கண்ணா அரசு கல்லுாரி, எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரி மற்றும் புதிய பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில் மக்கள் பார்வையிட்டனர். கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் கிறிஸ்துராஜ், பஸ் ஸ்டாண்டில் மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் பார்வையிட்டார்.