இன்றைய இதழியலின் முன்னோடி டி.வி.ஆர்., நினைவுநாள்
இன்றைய இதழியலின் முன்னோடி டி.வி.ஆர்., நினைவுநாள்
இன்றைய இதழியலின் முன்னோடி டி.வி.ஆர்., நினைவுநாள்

வளர்ச்சிக்கான கருவி
மேற்கத்திய நாடுகளில் வெறுமனே செய்திகளை மட்டும் தந்து கொண்டிருந்த பத்திரிகைகள், 1970களுக்கு பின், 'மக்களின் குரலாக' அவர்களின் குறைகளை, தேவைகளை எழுதத் துவங்கின. ஆனால் அதை, 1955- - 1960களிலேயே ஆரம்பித்து, சாதித்துக்காட்டியவர் டி.வி.ஆர்.,
தலையெழுத்தை மாற்றிய எழுத்து
அவரது எழுத்துப்பணி தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றியது. 'நைல் நதியை விட, தாமிரபரணி தான் முக்கியம்' என அவரே குறிப்பிடுவது போல, உள்ளூர் செய்திகளுக்கும் மக்களின் பிரச்னைகளுக்கும் முக்கியத்துவம் தந்து, தலைநகரில் இருந்த ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்த்தார்.
ஒரு பக்க செய்தி
உசிலம்பட்டி முதல் போடி வரை, 1975ல் பெரும் மணல்காற்று வீசியது. விவசாய நிலங்கள், கிணறுகள் மணலால் மூழ்கின. மரங்கள் சாய்ந்தன. விவசாயிகள் பெரும் துயரமடைந்தனர். மணலை அப்புறப்படுத்த தனி ஒரு விவசாயியால் முடியாது. ராட்சத இயந்திரங்கள் வரவேண்டும். அதற்கு அரசின் பார்வைக்கு தகவல் செல்வதே வழி. வெளிஉலகத்திற்கு தெரியாத இந்த தகவலை படங்களுடன் ஒருபக்க செய்தியாக வெளியிட, அதிகாரிகள் சென்னையில் இருந்து இயந்திரங்களுடன் வந்து விவசாயிகளுக்கு உதவினர்.
டி.வி.ஆர்., சாதித்தது என்ன?
மலைகள், காடுகள் அழிவதால் பருவமழை பெய்யாது; நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறையும் என்று, இன்றைய 'புவி வெப்பமயமாதல்' நிலையை அன்றே உணர்ந்தவர் டி.வி.ஆர்., இதனால் கண்மாய், ஆறு, குளங்களை காக்க, தொடர்ந்து கட்டுரை வெளியிட்டார்.
அன்றைய தலைவர்கள் சொன்னது
'குமரி மாவட்டத்திற்கு குடிநீர், ரயில் போக்குவரத்திற்கு முதலில் அரசின் உதவியை நாடினார் டி.வி.ஆர்., தினமலர் வலுவான செய்தித்தாளாக மாறியதும், அரசியல் தலைவர்கள் டி.வி.ஆரின் தயவை நாடினர். சமூக மாற்றத்திற்கு அரசியல் ஆதரவு, தினமலர் வழியாக டி.வி.ஆருக்கு எளிதாக கிடைத்தது; இது பெரும் சாதனை' என்றார், திராவிட மொழியியல் பள்ளியின் நிறுவனர், மறைந்த தமிழறிஞர் வி.ஐ.சுப்பிரமணியம்.