/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/வீடுகளை சூழ்ந்த மழைநீர் கடலுாரில் வடியாத அவலம்வீடுகளை சூழ்ந்த மழைநீர் கடலுாரில் வடியாத அவலம்
வீடுகளை சூழ்ந்த மழைநீர் கடலுாரில் வடியாத அவலம்
வீடுகளை சூழ்ந்த மழைநீர் கடலுாரில் வடியாத அவலம்
வீடுகளை சூழ்ந்த மழைநீர் கடலுாரில் வடியாத அவலம்
ADDED : ஜன 11, 2024 11:16 PM

கடலுார்:செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்த 7, 8ம் தேதிகளில், கனமழை பெய்தது. கூவத்துார் அடுத்த கடலுார் ஊராட்சி பகுதியில் பெய்த கனமழையால், நான்காம் வார்டில் உள்ள வெங்காட்டுத்தெரு, தொடர்ந்தார்பேட்டை, ஆறாம் வார்டில் உள்ள வவ்வால்குட்டை உள்ளிட்ட இடங்களில், மழைநீர் வீடுகளை சூழ்ந்தது.
அப்போது தேங்கிய மழைநீர், தற்போது வரை வடியாமல் உள்ளது. அதனால், அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் கடுமையாக அவதிப்படுகின்றனர்.
வீடுகளில் தங்க இயலாமல், உறவினர் வீடுகள், புயல் பாதுகாப்பு மையத்தில் தங்கியுள்ளனர். மோட்டார் மூலம் நீரை இறைத்து வெளியேற்ற வலியுறுத்தியும், ஊராட்சி நிர்வாகம் அலட்சியப்படுத்துவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சில நாட்களாக தண்ணீர் தேங்கியுள்ள நிலையில், கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. அதனால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
எனவே, வடியாமல் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற, லத்துார் வட்டார வளர்ச்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்திஉள்ளனர்.